தியாகத்தை விட வியாபாரத்திற்கு முக்கியத்துவமா?? யாழ் மாநகரசபையின் பொறுபற்ற செயல் - ஆதித்தன்

நல்லூரான் வீதி நடந்தால் வினை தீரும் யாழ் மண்ணின் பெருமைமிகு அடையாளங்களின் ஒன்றான நல்லைக்கந்தனின் உற்சவம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது அலங்காரக்கந்தனின் அருளாசியை பெறுவதற்கு  இலட்சக்கணக்காணணவர்கள் வேற்றினத்தவர்கள் உற்பட புலம்பெயர்ந்தவர்கள் தென்னிலங்கையை சேர்ந்தவர்கள் என ஒவ்வெரு நாளும் வீதி நிறைந்த மக்கள் நல்லூரான் வீதியை வலம்வந்துகொண்டிருக்க ஆலயத்திற்குள்ளே அபிசேகங்கள் ஆராதனைகள் தேவாரத்திருப்பதிகங்கள் என ஒலித்துக்கொண்டிருக்கின்றது.

ஒரு பக்திப்பரவசத்தில் மெய்மறந்து அந்த ஆறுமுகனின் துதிபாடிக்கொண்டிருக்க
ஆண்மீகவாதிகளின் சொற்பொழிவுகள் தொலைக்காட்சி நிலையங்கள் வானொலி நிலையங்கள் என நல்லைக்கந்தன் புகழ்ஆசியாவையும் தாண்டி ஒலித்துக்கொண்டிருக்கின்ற பெருமை மிகு தருணத்திலே ஆலயத்திற்கு வெளியே வியாபார நிலையங்கள் கேளிக்கையூட்டும் ஒரு சில நிகழ்வுகள் ஒட்டு மொத்தமாக ஒரு வியாபார நிலையங்கள் என்றே கூறலாம்  ஆலயத்திற்க்கு உள்ளே இடம்பெறும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆலய நிர்வாகம் பெறுப்பேற்கின்ற நிலையிலே ஆலயத்திற்கு வெளியே அனைத்து நிர்வாகமும் யாழ் மாநகர சபையினையே சாரும் அந்த வகையிலே அங்கே  வீதிகள் எங்கும் வியாபார நிலையங்கள் சிறிய கடைகள் என ஒவ்வொரு சதுர அடியும் ஒவ்வெரு தரத்திற்கேற்றால்போல ஏலத்தில் விடப்பட்ட பின்னரே அங்கே வியாபாரம் செய்யவோ அல்லது கடைகள் அமைப்பதற்கோ அனுமதியளிக்கப்பட்டிருக்கின்றது இதற்கான முழு பொறுப்பும் யாழ் மாநகரசபையினையும் அதன் நிர்வாகத்தையுமே சாரும்.

அந்த வகையிலே தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்திற்கு முன்னால் உள்ள இடத்தின் வாடகை  என்ன?? இதற்கான பெறுமதி என்ன என்பதை யாராலும் நிர்ணயிக்க முடியுமா? எத்தனையோ கோடி செலவிலே நல்லைக்கந்தன் அலங்காரக்கந்தன் ஆடம்பரக்கந்தன் என்று
தங்கத்தால் கூரை வேய்ந்து யாழ் மன்ணின் அடையாளம் யாழ்ப்பாணத்தின் பெருமை என்று பல காரணங்களை கூறுகின்ற அறிவாளிகளே! அங்கே வீதியோரமாய் சிதைந்துகிடக்கும் திலீபனின் நினைவாலயம் அகிம்சையின் அடையாளம் அல்லவா? அது ஒரு தியாகத்தின் உறைவிடம் அல்லவா? மலர்தூவி  மாலையிட்டு மதிப்பளிக்கவேண்டிய வரலாற்றுச்சின்னம் அல்லவா? ஆனால் அந்த இடமே தெரியாத அளவு இலங்கையின் தொலைத்தொடர்பு வலையமைப்பு நிலையம் ஒன்று பிரமாண்டமான ஒரு கொட்டகை அமைத்து வியாபாரம் செய்ய அங்கே அனுமதித்தது யார்?? அதற்கான விலை என்ன??

வார்தைக்கு வார்த்தை மாவீரர்கள் தமிழ்த்தேசியம் என்று வாய் கிழிய பேசுகின்றவர்கள் ஒட்டுமொத்தமாக வெட்கித்தலைகுனியவேண்டும் வரலாற்றுச்சிறப்பு மிக்க நல்லூரான் வீதியிலே தமிழர்களின் அகிம்சைக்கான ஒரு அடையாளம் அடையாளமே தெரியாமல் மறைந்து கிடக்கின்றது.

சிலை திறப்போம் பூங்கா அமைப்போம் துயிலும் இல்லங்களை கட்டியெழுப்புவோம் பேசிப்பேசி ஆட்சியமைத்தவர்கள் உன்மையிலே தமிழ்த்தேசியத்திலும் மாவீரர்கள்மீதும் பற்றுள்ளவர்களாக இருந்தால்  நல்லைக்கந்தனை காண உலகம் எங்கிலும் இருந்தும் நாடு முழுவதிலும்
இருந்தும் இலட்சக்கணக்காண மக்கள் வருகைதருகின்ற இந்த தருணத்திலே தியாகதீபம் திலீபனது நினைவாலயம் அனைவரதும் கண்களிலே படுகின்ற அளவு  இட ஒதுக்கீட்டினை செய்திருக்கவேண்டும் அந்த நினைவிடத்தை மறைக்காத அளவு வியாபார நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும் அங்கே வருகின்ற நூற்றில் ஒரு பிள்ளையாவது அந்த நினைவாலயத்தை பற்றிய கேள்வியை தொடுக்கும் நல்லைக்கந்தன் புகளைப்பாடுகின்ற அதே சமயம் அந்த இலட்சிய வீரனின் தியாகமும் அவனது ஈகமும் பேசப்பட்டிருக்கும். 

ஆனால் ஒட்டுமொத்தமாக அனைத்தையுமே மூடி மறைக்கின்ற அளவுக்கு ஒரு கேவலமான துரோகத்தனமான ஒரு செயற்பாட்டினை மேற்கொண்டது யார் அதுவும் தியாக தீபம் திலீபனின் நினைவு சுமந்த இந்த மாதத்திலே ஒரு மக்கள் கூட்டம் நடமாடுகின்ற இடத்தில்
அவனது நினைவாலயம் மறைக்கப்படுவது  மிகவும் ஒரு கேவலமான ஒரு செயல்  இந்த உலகம் தமிழர்களை பயங்கரவாதிகள் என்றும் தீவிரவாதிகள் என்றும் இகழ்கின்ற போது நல்லூரான் வீதியிலே நாங்களும் அகிம்சைவழியிலே நின்றவர்களே என்ற ஒரு வரலாற்று
உன்மையினை தியாகி திலீபனது நினைவாலயம் உரத்துக்கொல்கின்றது காந்திக்கு சிலைவைத்து கொண்டாடும் மன்ணிலே காந்தியிலும் சிறந்த எங்கள் திலீபனை புறக்கணிப்பது அநீதி.

#Thileepan #Rasaiah Parthipan  #Lt. Colonel Thileepan #Liberation Tigers of Tamil Eelam











No comments