தொடரும் இரு வழி ஈருறுளி மற்றும் காண்காட்சி ஊர்திப் பயணங்கள்

பாரிஸ் மாநகரத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட மனிதநேய ஈருருளிப் பயணம் இன்று 09/09/2018 ஞாயிறு காலை நான்சி என்னும் நகரை அண்மித்து சென்றது. உலக யுத்தங்களில் தமது நாட்டுக்கா போராடி உயிர்நீத்த வீர்களின் கல்லறைகளை தாண்டி சென்றிருந்தனர்.
எதிர்வரும் 11.9.2018 அன்று பாரிஸ் மாநகரத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட மனிதநேய ஈருருளிப் பயணம் மற்றும் பிரித்தானியாவில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட மனிதநேய ஈருருளிப் பயணமும் ஸ்ட்றாஸ்புர்க் நகரத்தில் அமைந்துள்ள ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு முன்பாக நடைபெறவுள்ள கவனயீர்ப்பு ஒன்று கூடலில் கலந்துகொள்ள இருக்கின்றனர்.
இன்றைய தினம் ஜநா நோக்கிய நீதிக்கான கண்காட்சி ஊர்திப்பயணத்தின் முதலாவது கண்காட்சியும் பரப்புரையும் பிற்பகல் 3 மணியில் இருந்து மாலை 6 மணிவரை நோர்வே நாடாளுமன்றத்தின் முன்பாக நடைபெற்றது. இவ் நிகழ்வில் வேற்றின மக்கள் ஆர்வத்துடன் கண்காட்சியை பார்வையிட்டதுடன் தமிழ் மக்களுக்கான தமது கரிசனையையும் வெளிப்படுத்தினார்கள். அத்தோடு கண்காட்சியை விளக்கும் வகையில் ஒலி வடிவத்தில் பல்வேறு மொழிகளில் விளக்க உரைகளும் இணைக்கப்பட்டது.
நாளைய தினம் நீதிக்கான கண்காட்சி ஊர்திப்பயணம் சுவீடன் நாட்டில் தனது பணியை தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.
#Germany #Cycle Rally
Post a Comment