யாழ் - கொடிகாமத்தில் வாகன விபத்து! முதியவர் பலி! மற்றொருவர் படுகாயம்!

இன்று செவ்வாய்க்கிழமை காலை 6 மணியளவில் கொடிகாமம், இராமாவில் பகுதியில் வீதியால் பயணித்துக்கொண்டிருந்து இரு சக்கர உழவூர்தி (லான்ட்மாஸ்ரர்) மீது அதே திசையில் பயணித்த சிற்றூர்தி (ஹையஸ்) மோதியது.
இதில் இரு சக்கர உழவூர்த்தியில் பயணித்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அத்துடன் உதவியாளராக இருந்தவர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
#Chavakachcheri # Accident #Jaffna
Post a Comment