சுழிபுரத்தில் புலி?

சுழிபுரம் கண்டல்காட்டுப்பகுதியில் சருகுப்புலி அல்லது காட்டுப்பூனையினத்தை சேர்ந்ததென நம்பப்படும் குட்டியொன்று அகப்பட்டுள்ளது.மீன்பிடிக்க வைக்கப்பட்டிருந்த வலையினுள் அகப்பட்டிருந்த குறித்த குட்டி இன்று காலை அங்கு மீன் சேகரிக்க சென்ற மீனவரிடம் அகப்பட்டுள்ளது.

எனினும் அது சருகுப்புலி அல்லது காட்டுப்பூனையினத்தை சேர்ந்ததென நம்பப்படுகின்ற நிலையில் வனஜீவராசிகள் திணைக்களத்திடம் கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments