மயிலிட்டி பாடசாலையில் மிஞ்சியது மதுபான போத்தல்களே!


பெரும் பிரச்சாரங்களுடன் நேற்று படையினரின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட மயிலிட்டி தெற்கு கலைமகள் மகாவித்தியாலயத்தில் புத்தர் சிலையும் படையினர் குடித்து தீர்த்த மதுப்போத்தல்களும் மட்டுமே எஞ்சியுள்ளது.பாடசாலை தளபாடங்கள் உள்ளிட்ட அனைத்துமே சூறையாடப்பட்டும் பெரும்பாலான கட்டடங்கள் அத்திவாரம் வரை உடைத்தெறிக்க  சூழ படைமுகாம்களை பேண படைத்தரப்பு முடிவு செய்துள்ளது. 

இதனிடையே விடுவிக்கப்பட்ட பாடசாலை வளவில் ஏற்கனவே படையினர் நிறுவிய புத்தர் சிலை ஒன்று அப்படியே இருக்க விடப்பட்டுள்ளநிலையில் மாணவர்கள் அதனை வேடிக்கை பார்த்துவருகின்றனர்.

தமிழ் சமூகத்தை பொறுத்தவரையில் பாடசாலைகளினை கல்வித்தாயின் வதிவடமாக கருதுகின்ற நிலையில் அங்கு படையினரோ மதுபானச்சாலையினை ஒருபுறமும் மற்றொரு புறம் பௌத்த விகாரைக்கான இடமாகவும் பயன்படுத்தியுள்ளமை அம்பலமாகியுள்ளது.

ஏற்கனவே பாடசாலையை சூழ படைமுகாம்களை பேணியவாறு உள்ளநிலையில் படைமுகாம்களின் மத்தியில் மாணவர்கள் சுமூகமாக கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடமுடியுமாவென்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments