வேட்பாளராக விக்னேஸ்வரன் நிற்க முடியாது! முக்கிய பாத்திரம் ஏற்றால் இணந்து செயற்படத் தயார் - சுமந்திரன்

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு தனது தலை­மைப் பொறுப்­பி­லி­ருந்து தவ­றி­விட்­டது என்று கூறு­ப­வர் மீண்­டும் கூட்­ட­மைப்­பின் வேட்­பா­ள­ராக நிற்க முடி­யாது. அது சாத்­தி­ய­மற்­றது. எனவே சி.வி.விக்னேஸ்­வ­ரன் விரும்­பு­ கின்ற தனது நாலா­வது தெரி­வின்­படி கட்சி அர­சி­யலை
விட்டு விலகி, இங்­குள்ள அர­சி­யல் கட்­சி­க­ளை­யும், வெளி­நா­டு­க­ளில் உள்ள தமிழ் அமைப்புக்களையும் இணைந்து தமிழ் மக்­க­ளுக்கு அர­சி­யல் தீர்­வைப் பெறும் முயற்­சி­யின் ஒட்டுமொத்த தலை­மைப் பாகத்தை வகிக்­கும் மிக முக்­கி­ய­மான பாத்­தி­ரத்தை ஏற்க வரு­வா­ரா­னால் அவ­ரது தலை­மைக்­குக் கீழ் மிக­வும் சந்­தோ­ச­மா­கச் செயற்­பட நாங்­கள் தயா­ரா­கவே உள்­ளோம் என்று தெரி­வித்­துள்­ளார் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பேச்­சா­ள­ரும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­தி­ரன்.

தனி­யார் தொலைக்­காட்சி விவா­தம் ஒன்­றில் கலந்து கொண்டு கருத்­துத் தெரி­வித்­த­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­துள்­ளார். அவர் தெரி­வித்­தா­வது,

வடக்கு மாகாண சபைத் தேர்­த­லில் நாங்­கள் சி.வி.விக்­னேஸ்­வ­ரைன முத­ல­மைச்­சர் வேட்­பா­ள­ராக நிறுத்தி அவ­ருக்கு வாக்­க­ளி­யுங்­கள் என்று கோரி­னோம். அது­மட்­டு­மல்­லாது எமது கட்­சி­யின் அனைத்து வேட்­பா­ளர்­க­ளை­யும் உங்­கள் விருப்பு வாக்­கு­க­ளில் முத­லில் அவ­ருக்கே வாக்­க­ளி­யுங்­கள் என்று கூறி அவரை வெற்­றி­ய­டை­யச் செய்­தோம். ஆனால் எமக்­குள் முரண்­பாடு ஏற்­பட அவ­ரு­டைய சில செயற்­பா­டு­களே கார­ணம்.

தாம் அர­சி­ய­லில் முத­ல­மைச்­ச­ரா­கக் கள­மி­றங்­கி­ய­போது வீட்­டுச் சின்­னத்­துக்கு வாக்­க­ளி­யுங்­கள் என்று கூறி­னார். அதற்­குப் பின்­னர் நடந்த இரு தேர்­தல்­க­ளி­லும் அதற்கு மாறா­கவே செயற்­பட்­டார். கூட்­ட­மைப்­பின் முத­ல­மைச்­ச­ராக இருந்து கொண்டு அவர்­க­ளுக்கு வாக்­க­ளிக்­கா­தீர்­கள் என்று கூறி­னார். இதை நாம் மட்­டு­மல்ல எந்த ஒரு அர­சி­யல் கட்­சி­யும் ஏற்­றுக்­கொள்­ளாது.

ஒரு கட்­சி­யின் தலை­மைத்­து­வத்­தில் இருந்­து­கொண்டு இவ்­வா­றான கருத்­துக்­களை வெளி­யி­டு­வதை ஏற்­றுக் கொள்ள முடி­யாது. அத­னால் ஏற்­பட்ட முரண்­பா­டு­களு இப்­போ­தும் இருக்­கின்­றன.
இந்­தப் பிரச்­சி­னைக்கு முடிவு வர வேண்­டு­மா­னால் கூட்­ட­மைப்­பில் இருந்­து­கொண்டு கூட்­ட­மைப்பை விமர்­சிப்­பதை நிறுத்த வேண்­டும். அவர் கட்­சிக்­குக் கட்­டுப்­ப­டா­த­வ­ரா­கவே உள்­ளார்.

விக்­னேஸ்­வ­ரனை நாம் ஒரு நோக்­கத்­துக்­கா­கவே அர­சி­ய­லுக்­குக் கொண்டு வந்­தோம். ஆரம்­பத்­தில் அவர் சரி­யான பாதை­யில் பய­ணித்­தார். பின்­னர் எவரோ ஒரு­வ­ரின் செல்­லைக் கேட்டு கூட்­ட­மைப்­புத் தவ­றான பாதை­யில் பய­ணிக்­கின்­றது என்று தானா­கவே எண்ணி வேறு கட்­சிக்கு வாக்­க­ளி­யுங்­கள் என்று கூறு­வது தவ­றான விட­யம்.


தமிழ் மக்­க­ளின் ஒற்­றுமை சிதைந்­து­வி­டக் கூடாது. நாம் தேர்­த­லில் வேறு வேறு தரப்­பாக மோதக் கூடாது என்­றால் ஒரு தெரி­வு­தான் உள்­ளது. அவர் கட்சி அர­சி­ய­லில் இருந்து விலகி அனைவரையும் ஒன்­றி­ணைத்து முக்­கிய பாத்­தி­ரத்தை ஏற்க வந்­தால் நாமும் இணங்­கு­வோம் எனக் குறிப்பிட்டுள்ளார் சுமந்திரன்.

No comments