அகிம்சை வழியில் திலீபனின் நினைவேந்தல்!


தியாகி திலீபனின் 31வது ஆண்டு நினைவேந்தல் உணர்வுபூர்வமாகவும்
அதேவேளை அமைதியாகவும் நல்லூரில் இன்று காலை  நடைபெற்றிருந்தது.காலை 10.48 மணியளவில் திலீபன் இன்னுயிர் ஈந்த நேரமதில் நல்லூர் வடக்கு வீதியில் அனைவரும் கூடி அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் திலீபனின் தூபிப்பகுதியில் நினைவஞ்சலி நடந்தேறியது.மாவீரர்களது பெற்றோர்கள் கௌரவிக்கப்பட்டு அவர்களே பொதுச்சுடர்,ஈகைச்சுடர் மற்றும் மலரஞ்சலியில் முதன்மைப்படுத்தப்பட்டனர்.

தொடர்ந்து மக்கள் மலரஞ்சலி செலுத்தினர்.மக்களோடு மக்களாக அரசியல் தலைவர்கள்,முன்னாள் போராளிகள்,மதத்தலைவர்கள்,பல்கலைக்கழக மாணவர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.

இன்றைய நிகழ்வு குழப்பத்துடன் நடைபெறுமென பலரும் தகவல் பரப்ப அதனை பொய்ப்பித்து தியாகி திலீபனின் நினைவேந்தல் அவன் கையிலெடுத்த அகிம்சையுடன் கடைப்பிடிக்கப்பட்டிருந்தது.

திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு தமிழ் உணர்வாளர்கள் இருவர் தூக்கு காவடியெடுத்து வந்து திலீபன் தூபிப்பகுதியில் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
பெருமளவில் மக்கள் திரண்டுவந்து நீண்ட நேரம் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

ஏற்கனவே மூத்த போராளிகள்,ஊடகவியலாளர்கள்,பொது அமைப்புக்கள் மற்றும் அரசியல் தரப்புக்கள் கலந்து பேசி விடுத்த அறிவிப்பின் பிரகாரம் நிகழ்வு நடைபெற்றிருந்தது.

இதனிடையே கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்கள் என பலதரப்புக்களும் காணாமல் போயிருந்தன.

No comments