ஒருபுறம் உண்ணாவிரதம்: மறுபுறம் டெலோ கட்சி வளர்ப்பு!


உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழ்.மாவட்ட செயலகத்தின் முன்னால் போராட்டம் முன்னெடுக்கப்பட மறுபுறம் அருகாகவுள்ள மண்டபத்தில் டெலோ அமைப்பு கட்சி வளர்ப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளமை அம்பலமாகியிருக்கின்றது.

பொது அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் இணைந்து இன்று திங்கட்கிழமை அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றினை மாவட்ட செயலகம் முன்னதாக நடத்தியிருந்தன. இந்தப் போராட்டத்தில் பங்கெடுக்க  அழைப்பை விடுக்கப்பட்டிருந்தது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, புதிய மாக்சிஸ லெனிசக் கட்சி, சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு, காணாமல்போனோர் பெற்றோர் பாதுகாவலர் சங்கம் ஆகியன இணைந்து கவனயீர்ப்பு போராட்ட்த்தை முன்னெடுத்திருந்தன.

அநுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த 10 நாட்களாகத் தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற அவர்களில் நால்வரது நிலைமை மோசமடைந்துள்ளது.

இந்நிலையில் போராட்டத்தில் பங்கெடுக்காவோ எட்டிப்பார்க்கவோ முன்வராத டெலோ அடுத்த முதலமைச்சர் வேட்பாளர், தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவியை சிறீகாந்தாவிற்கு வழங்குவதென நீண்டநேரம் வாதிட்டிருந்தனர்.

எனினும் செல்வம் அடைக்கலநாதன் பிரசன்னமாகியிருக்காத நிலையில் சிவாஜிலிங்கம், சிறீகாந்தா, ஜனா மற்றும் விநோதரகலிங்கம், மகேந்திரன் என பலரும் பங்கெடுத்திருந்தனர்.

No comments