படையினர் நிலைகொண்டால் நல்லிணக்கம் வராது?

வடக்கில், இராணுவம் தொடர்ச்சியாக தனது படைகளை நிலைப்படுத்த முயற்சிக்குமாயின், அன்றுடன் தேசிய நல்லிணக்கமானது முற்றாக முறிவடையுமெனத் தெரிவித்த வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், மக்களை மீண்டும் கிளர்ந்தெழுவதற்கான சந்தர்ப்பத்தை அரசாங்கம் ஏற்படுத்த கூடாதெனவும் வலியுறுத்தினார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில், படையினர் வசமிருக்கின்ற காணிகளை விடுவிப்பதற்கு, அரசாங்கம் பணம் வழங்க வேண்டுமென்றும் யாழ்ப்பாண கோட்டையை படையினருக்கு தந்தால், மக்களின் காணிகள் பலவற்றையும் விடுவிக்க முடியுமெனவும் யாழ்ப்பாணம் மாவட்ட இராணுவத் தளபதி வெளியிட்ட கருத்து இது தொடர்பாக,  வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்திடம் வினவியபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து தொடர்ந்துக் கருத்துத் தெரிவித்த அவர், இன்னமும் சொற்ப காணிகளே விடுவிக்கப்பட வேண்டும் என அரசாங்கம் கூறி வருகின்ற நிலையில், இராணுவ தளபதி தற்போது வெளயிட்டிருக்கும் கருத்தானது,  முரண்பாட்டைத் தோற்றுவித்துள்ளதெனத் தெரிவித்தார்.

மக்களது காணிகளை விடுவிப்பதற்கு இராணுவத் தளபதி நஷ்டஈடு கோரியிருக்கினற் நிலையில், எதற்கு அவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டுமெனக் கேபள்வியெழுப்பிள அவர், தமது நிலங்களையும் வீடுகளையும் இழந்து விட்டு நிர்க்கதியாக நிற்கும் மக்கள், உங்களுக்கு எதற்கு பணம் வழங்க வேண்டுமெனவும் வினவினார்.

எங்களைப் பொறுத்த வரையில், இராணுவமானது பௌத்த - சிங்கள இராணுவமாகவே உள்ளதெனத் தெரிவித்தார்.

தாங்கள் மாத்திரம் அடிமை இனம் என்ற சிந்தனையில் நீங்கள் செயற்படுவதனூடாக, உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாதெனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, கோட்டை என்பது தொல்லியல் அருங்காட்சியமாக மாற்றப்பட வேண்டுமே தவிர அதில் இராணுவ முகாம்களை அமைக்க முடியாதென, அவர் மேலும் கூறினார்.

No comments