மைத்திரியை கொல்ல பொலிசார் சதித்திட்டம் ?


ஜனாதிபதியை கொலை செய்யும் திட்டம் அரசாங்கத்திடமும் பொலிஸாரிடமும் இருந்திருந்தால் சாதாரண மக்களின் பாதகாப்பு சம்பந்தமாகவும் பிரச்சினை இருப்பதாக கூட்டு எதிர்க்கட்சி கூறியுள்ளது.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே கூறினார். இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது,

நேற்று (12) கண்டி பிரதேசத்தில் ஊழல் எதிர்ப்பு படையணியின் பணிப்பாளர் நாமல் குமார நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பான பல விடயங்களை வௌிப்படுத்தியதாகவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கிழக்கு மாகாணத்தில் வைத்து கொலை செய்யும் திட்டம் சம்பந்தமாகவும் கருத்து வௌியிடப்பட்டுள்ளது.

இது மிகவும் பாரதூரமான கருத்து என்றும் எதிர்காலத்தில் பொலிஸார் சம்பந்தமாக எதுவித நம்பிக்கையும் இல்லை என்றும் அவர் கூறினார்.

பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் நாலக சில்வாவை கைது செய்ய வேண்டும் என்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் விசாரணை செய்ய வேண்டும் என்றும், நாமல் குமாரவிற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் மஹிந்தானந்த அளுத்கமகே கூறினார்.

இன்று நடைபெற்ற விஷேட அமைச்சரவை கூட்டத்திலும் இது சம்பந்தமாக பேசப்பட்டிருப்பதற்கு தகவல் கிடைத்திருப்பதாக அவர் கூறினார்.

No comments