புல்மோட்டை:முஸ்லீம்களிற்கும் ஆப்படிக்கின்றது நல்லாட்சி?


வடகிழக்கு தமிழர் தாயகத்தினை கூறுபோடும் இலங்கை அரசின் சதியின் ஒரு அங்கமாக வடபுலமாக கொக்கிளாய் பகுதியை ஆக்கிரமித்துக்கொண்டு மறுபும் திருகோணமலை மாவட்டத்தில் கொக்குளாய் முகத்துவாரத்திற்கு தெற்கே 25 ஏக்கர் நிலப்பரப்பில் புல்மோட்டை பகுதியில் புதிய சிங்கள குடியேற்றத்திட்டம் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டுள்ளது.
முஸ்லீம் மக்களின் பூர்வீகமான மண்ணான மாலானூரில் ஒரே இரவில் பல குடிசைகளைத் துரிதமாக அமைத்து இந்த சிங்கள குடியேற்றத்தை உருவாக்கியுள்ளனர்.கொழும்பில் உள்ள அரச அதிகாரிகள் அவர்களுக்கு நிரந்தர வீடமைப்பதற்கான  நிதியுதவியை வழங்குவதாக உறுதியளித்துள்ளனர். 

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் புல்மோட்டையில் பெரும்பாலான ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் தமிழ் பேசும் முஸ்லீம் குடும்பங்களுக்கு சொந்தமானவை. சிங்கள பௌத்த அமைப்பானது முல்லைத்தீவு மாவட்டத்தில் குமுழ முனையிலும் நயாயாறிலும் ஒருபுறம் தமிழ் மக்களது நிலங்களை ஆக்கிரமித்துக்கொண்டேயிருக்கின்றது.கொக்கிளாய்க்கு வடக்கே அவ்வாறு இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.

வடகிழக்கு ஈழத் தமிழர்கள் மற்றும் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலையில் உள்ள தமிழ் பேசும் முஸ்லீம்கள் கூட்டு கலாச்சார இனப்படுகொலையை எதிர்த்து கூட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதென ஆர்வலர்கள் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு இடையே உள்ள எல்லையில் அமைந்துள்ள கொக்குளாய் முகத்துவாரத்திற்கு தெற்கே மாலதனூர் அமைந்துள்ளது .

இப்பகுதியில் 24 தமிழ் பேசும் குடும்பங்களுக்குச் சொந்தமான விவசாய நிலங்கள் புல்மோட்டையில் சமீபத்தில் இரவு நேர ஆக்கிரமிப்பில் சிங்களவர்களால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வீதி அபிவிருத்தி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் வனவளத் திணைக்களம் ஆகியவற்றிற்கும் சொந்தமான நிலங்களும் காலனித்துவமாகவும், தனியார் நில உரிமையாளர்களிடமிருந்தான பத்திரங்கள் பறிக்கப்பட்டு சிங்கள குடியேற்றம் அமைக்கப்பட்டுள்ளது.

முஸ்லீம் கிராமவாசிகள் 2014-2015 ஆம் ஆண்டில் மாலானூருக்கு அருகில் திட்டமிடப்பட்ட "சாந்திபுரா ராஜமஹா விஹாரா" என்றழைக்கப்படுவதற்கு எதிராக வழக்குகள் மற்றும் அரசியல் அழுத்தம் மூலம் எதிர்ப்பினை வெளியிட்டு வந்திருந்தனர்.

ஆக்கிரமிப்பு இராணுவத்தின் கஜபா படைப்பிரிவின் 27 வது பட்டாலியனிலிருந்து இராணுவம் குடியேறியவர்களுக்கும் அதே போல் பொலிஸாரும் குடியேறி சிங்கள குடியேற்றவாசிகளிற்கு பாதுகாப்பு வழங்கியதாக முஸ்லீம் மக்கள் தரப்பில் தெரிவித்தனர்.

கொழும்பில் உள்ள இலங்கை அதிகாரிகள் ஐ.தே.க. அமைச்சர் சஜித் பிரேமதாச உட்பட ஐந்து குடும்பங்களுக்கு ஐந்து லட்சம் மதிப்புள்ள வீடமைப்புத் திட்ட ஒதுக்கீட்டை முதல்கட்டமாக ஒதுக்கீடு செய்திருப்பதாக புல்மோட்டை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம மற்றும்  குச்சவெளி பிரதேச செயலாளர் ஆகியோர் குறித்த ஆக்கிரமிப்புக்கு எதிராக காவல்நிpலையத்தில் முறைப்பாடு செய்யக்கூடாது என அறிவுறுத்தியுள்ளார்.
குறித்த விகாரை மற்றும் குடியேற்றம் 12 வது மைல் போஸ்ட் மற்றும் 13 வது மைல் போஸ்ட் இடையே அமைந்துள்ளது.'சாந்திபுரா ராஜமஹா விஹாரா' என அழைக்கப்படுவது இராணுவ தளத்திற்கும் காலனிக்கும் இடையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments