தல்செவன படையினரது குடும்பத்தினருக்காம்?


யாழில் படையினரால் நடத்தப்படுகின்ற தல்செவன போன்ற ஹோட்டல்கள் படையினரது குடும்பங்கள் தங்கவே உருவாக்கப்பட்டவை.ஆனால் தற்போது தெற்கிலிருந்து வருகின்ற பொதுமக்கள் தங்க போதிய இடமில்லாதிருப்பதாலேயே அதனை வாடகைக்கு விடுத்து யாழ்ப்பாண இராணுவ கட்டளைத்தளபதி,மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டிராய்ச்சி தெரிவித்துள்ளார்.
பலாலி இராணுவ தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது எழுப்பப்பட்ட கேள்வியொன்றிற்கு பதிலளித்த அவர் இத்தகைய ஹோட்டல்கள் படையினரது நலன்புரி அலுவலல்களிற்கே பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நாங்கள் அரசியல்வாதிகளுடன் சேர்ந்து மக்களிற்கான உதவி திட்டங்களை செய்ய விரும்பவில்லை. எமக்கு அரசியல் நோக்கமேதுமில்லாமையாலேயே அரசியல் தவிர்த்து மக்களிற்கான உதவி திட்டங்களை செய்து வருவதாகவும் இலங்கை இராணுவத்தின் யாழ்.மாவட்ட . கட்டளை தளபதி தர்சன ஹெட்டியராட்சி மேலும் தெரிவித்தார்.

தமிழ் மக்களிற்கான இலங்கை இராணுவத்தின் உதவிகளை தமிழ் ஊடகங்கள் சில திரிபுபடுத்துவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதனிடையே ஆவா குழு எங்களுக்கு சின்ன விடயம் இரண்டு நாளுக்குள் அடக்கிவிடுவோம். நாட்டின் சட்டம் ஒழுங்கை மதித்தே காவல்துறையின் கடமைகளில் தலையிடாது பொறுமையாக இருக்கின்றோம்.

ஆனாலும் ஜனாதிபதியிடம் ஆவா குழுவை கட்டுப்படுத்த படையினரது உதவிதேவையாவென கோரியிருக்கின்றோம்.அவர் முடிவு எடுக்கும் வரை தாம் மக்களிற்கான உதவிகளை வழங்குவதில் காத்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதனிடையே வலிகாமம் வடக்கில் காணி விடுவிப்பு போன்ற விடயங்களில் ஆவா குழு போன்றவை மீண்டும் பெருமெடுப்பில் உருவாவது nபுhன்ற அச்சங்களால் தாமதிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments