லெப்.கேணல் பொன்னம்மான் நினைவாக பிரான்சில் நடைபெற்ற ஐரோப்பியா தழுவிய துடுப்பாட்டச் சுற்றுப்போட்டி

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, தமிழர் விளையாட்டுத்துறை 4 வது தடவையாக நடாத்திய லெப்டினன்ட் கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பியா தழுவிய 4 வது துடுப்பாட்டச்
சுற்றுப் போட்டி கடந்த 19.08.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் பாரிசின் புறநகர் Creteil   பகுதியில்  இடம் பெற்றது.

இப் போட்டியில் 20 கழகங்கள் பங்கு பற்றி சிறப்பித்தன.ஆரம்ப நிகழ்வாக 26.12.2007 அன்று நெடுந்தீவுக் கடற்பரப்பில் சிறீலங்கா கடற்படையுடன் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவடைந்த கடற்கரும்புலி மேஜர் ஈழவீரனின் சகோதர் ஈகைச்சுடர் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தினார்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து விளையாட்டு வீரர்களுக்கு போட்டி நடைமுறைகள் குறித்து தெரிவிக்கப் பட்டதைத் தெடர்ந்து போட்டிகள் ஆரம்பமாகின.

போட்டி முடிவில்:

ஆட்டநாயகன் கால் இறுதி ரிசோக் அரியாலை ஐக்கிய கழகம் - A
ஆட்டநாயகன் கால் இறுதி சான் நண்பர்கள் கழகம்.
ஆட்டநாயகன் கால் இறுதி அனுசயந்தன் எழிற்சி கழகம் - A
ஆட்டநாயகன் கால் இறுதி - விஜி Red Bull கழகம் - சுவிஸ்
ஆட்டநாயகன் கால் இறுதி - ரமணன் இணுவில் ஸ்ரார் கழகம் - B
ஆட்டநாயகன் அரை இறுதி விஸ்ணு அரியாலை ஐக்கிய கழகம் - A
ஆட்டநாயகன் அரை இறுதி ஜெகன் எழிற்சி கழகம் - A
ஆட்டநாயகன் மூன்றாம் இடம் விஜி Red Bull கழகம் - சுவிஸ்
சிறந்த பந்து வீச்சாளர் ரொசான் எழிற்சி கழகம் - A 29 / 7
சிறந்த துடுப்பாட்ட வீரர் ரிசோக் அரியாலை ஐக்கிய கழகம் - A 131 ஓட்டம்
சிறந்த சகலதுறை ஆட்ட வீரர் அனுசயந்தன் எழிற்சி கழகம் - A 126 ஓட்டம்
இறுதியாட்ட நாயகன் தர்சன் அரியாலை ஐக்கிய கழகம் - A 0-2
மூன்றாம் இடம் 100 யூரோ Red Bull கழகம் - சுவிஸ்
இரண்டாம் இடம் 500 யூரோ எழிற்சி கழகம் - A
முதலாம் இடம் 1000 யூரோ அரியாலை ஐக்கிய கழகம் - A
No comments