மைத்திரியிடம் காத்திருக்கின்றனர் தமிழ் மக்கள்: மாவை!

தமிழ் மக்களது பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் நம்பிக்கையுடன் தமிழ் மக்கள் இப்போதும் இருப்பதாக மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

மயிலிட்டி மீன்பிடி துறை முக அத்திபார கல்லை நாட்டிவைக்க வந்திருந்த இலங்கை ஜனாதிபதி முன்னதாக இவ்வாறு தெரிவித்த மாவை ஒரு கட்டத்தில் தழுதழுத்த அழுகை குரல் மத்தியில் உரையாற்றினார்.
முன்னைய தனது அகிம்சை வழி போராட்டம்,சிறையடைப்பு பற்றியெல்லாம் வழமை போன்றே தனது உரையில் நினைவுகூர்ந்தே மாவை தழுதழுத்ததுடன் பலாலியில் தனது சிறை அனுபவம் பற்றியெல்லாம் பேசினார்.

தனது கண்ணீரை தவறாக மொழிபெயர்க்க வேண்டாமென கேட்டுக்கொண்ட மாவை இவ்வாறான தவறான மொழி பெயர்ப்பினால் பதவியிழந்த விஜயகலா இங்கு ஒரு மூலையில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

எங்கள் கண்ணீர் இன்று சர்வதேச மட்டத்தில் பலம் வாய்ந்ததாக இருப்பதாக தெரிவித்தார்.

இதனிடையே மைத்திரியின் வருகையினை முன்னிட்டு வலிகாமம் வடக்கு காங்கேசன்துறை மத்தி ஜே-234 கிராமசேவையாளர் பிரிவில் உள்ள 4.2 ஏக்கர் நிலப்பரப்பு இன்று இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்து 28 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டது.

இதற்கான நிகழ்வு நேற்று மாலை 3 மணிக்கு இன்று விடுவிக்கப்பட்ட காங்கேசன்துறை ரயில் நிலையத்திற்கு அண்மையில் பெருமெடுப்பில் இடம்பெற்றது.
இதன்படி விடுவிக்கப்பட்ட நிலப்பத்திரம் உத்தியோகபூர்வமாக யாழ்.மாவட்ட இராணுவக் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியினால் யாழ்.மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகனிடம் கையளிக்கப்பட்டது.

No comments