குடிநீர் குழாய் உடைவு! நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை!
திருகோணமலை, தம்பலகாமம் வடிகாலமைப்பு பிரிவிற்கு உட்பட்ட முள்ளிப்பொத்தானை வான்எல பிரதான வீதியின் குடிநீர் குழாய் உடைந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் சுமார் இரண்டு மாதங்களாக குடிநீர் விரயமாகிக் கொண்டிருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதனையடுத்து தம்பலகாமம் பிராந்திய குடிநீர் வடிகாலமைப்பு காரியாலயத்தில் தொடர்ச்சியாக முறைப்பாடு செய்த போதும், அதனை சீர் செய்வதற்காக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
எனவே உரிய அதிகாரிகள் இது தொடர்பில் கவனம் எடுத்து விரைவில் இந்த பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளனர்.

Post a Comment