ரவிராஜிடம் ராஜிதவை இழுத்துவந்த சயந்தன்?


சாவகச்சேரி வைத்தியசாலைக்கு வருகை தந்திருந்த இலங்கை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவை மறைந்த மாமனிதர் ரவிராஜிற்கு மலர் அஞ்சலி செலுத்த செய்துள்ளார் வடமாகாணசபையின் சுமந்திரன் அணியை சேர்ந்த சயந்தன்.

சாவகச்சேரி பிரதேச செயலக முன்றலில் அமைக்கப்பட்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் அவர்களின் உருவச்சிலைக்கே சயந்தனின் வேண்டுகோளின் பேரில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மலர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இன்றையதினம் மாலை 4:30 மணியளவில் தென்மராட்சி சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையில் நிர்மாணிக்கப்பட்ட இரத்த சுத்திகரிப்பு நிலையத்தை திறந்துவைக்க வருகை தந்தபோது இலங்கை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் ரவிராஜ் சிலைக்கு அஞ்சலி செலுத்த சயந்தன் கோரியுள்ளார்.

எனினும் அவ்வாறு சிலை இருப்பது தனக்கு தெரியாதென கூறிய ராஜித ரவிராஜ் தனது நண்பரென தெரிவித்து அங்கு பயணம் செய்து அஞ்சலி செலுத்தியிருந்தார்.
இந்த நிகழ்வில் வட மாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தன்,அவரது ஆதரவு நகரசபை தவிசாளர்  சிவமங்கை,பிரதேச சபை தவிசாளர் க.வாமதேவன் நகரசபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

No comments