ஓட்டமாவடியில் வீடு எரிந்து முற்றாகச்சேதம்!


ஓட்டமாவடி பகுதியில் வீடொன்று முற்றாக எரிந்துள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை மாலை வீட்டின் மேல் மாடியில் தீப்பற்றியதுடன், வீட்டுப்பொருட்களும் முற்றாகச் சேதமடைந்துள்ளது.

ஓட்டமாவடி மூன்றாம் வட்டாரத்தில் மூத்தவன் போடியார் வீதியிலுள்ள நில அளவைத் திணைக்களத்தில் கடமை புரியும் முஹம்மட் இஸ்மாயில் ஸபீர் என்பவரது வீடே தீப்பற்றி எரிந்த வீடு என்றும், வீட்டிலிருந்த எவருக்கும் எந்தவித ஆபத்துக்களுமின்றி உயிர் தப்பியுள்ளனர்.

தீயை அனைப்பதற்கு மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைக்கும் படையினர், ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர்கள், ஊழியர்கள் மற்றும் பிரதேச முஸ்லீம் தமிழ் இளைஞர்களது உதவியுடன் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி தெரிவித்தார்.

ஓட்டமாவடி பிரதேச சபையில் தீயணைக்கும் படைப்பிரிவு இல்லாமை இப்பகுதியில் ஏற்படும் தீயை உடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாத துர்ப்பாக்கிய நிலை இருப்பதாகவும், மட்டக்களப்பிலிருந்து தீயணைக்கும் படையினர் வருவதற்கு ஒரு மணித்தியாலம் தாமதமேற்படுவதாகவும் ஓட்டமாவடி பிரதேச சபையில் தீயணைப்பு பிரிவு இருக்குமானால் தீயினால் ஏற்படும் அழிவுகளைக் குறைக்கலாம் என்றும் ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி மேலும் தெரிவித்தார்.

இத்தீச்சம்பவம் மின்னொழுக்கா? அல்லது எவரதும் திட்டமிடப்பட்ட செயலா? என்ற கோணத்தில் விசாரணைகள் நடைபெறுவதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments