வரிப்புலி சீருடையை அகற்ற உத்தரவிட்ட சரத்பொன்சேகா?
முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் தற்கொடையாகிய மாவீரர்களது உடலங்களிலிருந்த வரிப்புலி சீருடைகளை அகற்றிவிட தற்போதைய அமைச்சரும் முன்னாள் இராணுவத்தளபதியுமான சரத்பொன்சேகா உத்தரவிட்டமை அம்பலமாகியுள்ளது.
சிங்கள ஊடகவியலாளர் இது தொடர்பான தகவல்களை அம்பலமாக்கியுள்ளார். இதேபோன்று தேசியத்தலைவருடையதென காண்பிக்க உடலத்திலிருந்தும் வரிப்புலி உடையினை அகற்ற அவர் உத்தரவிட்டதாக குறித்த ஊடகவியலாளரான திஸ்ஸ ரவீந்திர பெரேரா கூறுகிறார்.

சரத்பொன்சேகாவின் உத்தரவை பிரிகேடியர் கலகே என்பவர் குறித்த உடலத்தை கிட்டத்தட்ட 20 கிலோமீட்டர் தூரத்திலுள்ள இராணுவம் முகாம் ஒன்றிற்கு எடுத்து சென்று ஒரு அரைத்துணியை அணிவித்து விநாயகமூர்த்தி முரளிதரன் ,தயா மாஸ்டர் ஆகியோரை பயன்படுத்தி அடையாளம் காட்டும் நாடகத்தை அரங்கேற்றியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதனாலேயே இராணுவம் போர் குற்றங்களை புரிந்ததை மறுப்பதாகவும், இலங்கை அரசாங்கம் கடுமையாக சர்வதேச பங்களிப்புடன் ஒரு சிறப்பு நீதிமன்றம் நியமித்தது, விசாரிக்க எதிர்க்கிறதெனவும் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment