இராணுவ வாகனம் மோதி பொதுமகன் பலி!

கிளிநொச்சியில் இராணுவத்தினரின்  வாகனம் மோதியதில் ஒருவர் ஸ்தலத்தில் பலியானார். குறித்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சியிலிருந்து இரணைமடு திசை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது, அதே திசையில் சென்ற இராணுவத்தினரின் ரக் ரக வாகனம் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி 155ம் கட்டை பகுதியி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திய கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியை சேர்ந்த 51 வயதான க.குகனேஸ்வரன் என்ற 5 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
பூர்வாங்க விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர். இதேவேளை குறித்த சம்பவம் இடம்பெற்ற இடத்தில் சிலமணிநேரம் அமைதியின்மை ஏற்பட்டது.

No comments