பௌத்தத்திற்கு முதலிடம்:பேசுவதற்கு ஏதுமில்லை:நல்லை ஆதீனம்!

பௌத்த மதம் இலங்கையில் முதன்மையான இடத்தைப்பெற்றுள்ளதால், எங்களது உரிமைகளைபெற்றுக்கொள்ளமுடியாதிருப்பதாக நல்லை குருமுதல்வர் சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகள் கவலை தெரிவித்துள்ளார்.


மத ரீதியாக நாம் ஒதுக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு எங்களுக்கு எந்தவிதமான வழியும் இல்லை; எங்களுக்கு சொந்தமான எந்த மாநிலமும் இல்லை துரதிருஸ்டவசமாக, நம் மக்கள் இன்னும் அதனை புரிந்து கொள்ளவில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே யாழ்ப்பாணக் கோட்டை தனது சொத்து எனக் கூறும் இராணுவத்தைப் பற்றி அவர் கருத்து தெரிவிக்கையில், இத்தகைய இராணுவமயமாக்கல் யாழ்ப்பாணத்தில் தமது பண்டைய பாரம்பரியத்தை நிறுவுவதற்கு தமிழர்களுக்கு ஆபத்தை தோற்றுவிக்குமெனவும் அவர் தெரிவித்தார்.

தற்போதும் இராணுவம் யுத்தம் தொடர்பான தனது குறியீட்டைப்பாதுகாப்பதோடு, இராணுவ மயமாக்கலை முன்னெடுத்துவருவதாகவும் நல்லை ஆதீனம் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய போரின் அடையாளங்கள அழித்துவிட்டதால் அவற்றை கண்டுபிடிக்க எங்கும் இடம் இல்லை.  இலங்கை இராணுவம் மற்றும் தொல்பொருளியல் ஊடாக சிங்கள பௌத்தமயமாக்கல் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்த அவர் ஒரு மதத் தலைவராக அதனை வெளிப்படையாக நாங்கள் பகிரங்கமாக கூற முடியாதெனவும் அவர் தெரிவித்துள்ளார். 
யாழ்ப்பாணத்தில் இராணுவத்தின் தளபதிகள் மற்றும் வடக்கிற்கு வருகைபுரியும் பல்வேறு மத பிரமுகர்களும் நல்லை ஆதீனத்தினை சந்தித்துவருகின்றனர்.அவர்கள் புத்தர் இந்து மரபுகளிலிருந்து வந்ததாக கூறுகின்றனர்.பௌத்தம் மற்றும் இந்து மதம் ஆகியவை பொதுவான ஒன்றினைப் பற்றிக் கூறுகின்றன என்று அவர்கள் நியாயப்படுத்த முற்படுகின்றனரெனவும் நல்லை ஆதீனம் தெரிவித்துள்ளார்.

No comments