அம்பாறையிலும் தமிழ் மக்கள் போராட்டத்தில்!


வடக்கினை தொடர்ந்து கிழக்கின் அம்பாறை ஊறணி கனகர் கிராமத்தில் மீள்குடியமர்வை வலியுறுத்தி தமிழ் மக்கள் போராட்ட களமொன்றை திறந்துள்ளனர்.

அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவில் ஊறணியிலுள்ள 60ம் கட்டை கிராமத்தில் தமிழ் மக்கள் 1972ஆம் ஆண்டில் 278 குடும்பங்கள் கோமாரி கிராமசேவகரின் கீழ் பதிவு செய்து வாழ்ந்து வந்தன. இதன்பின்னர் 1981ஆம் ஆண்டில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கனகரெட்ணம் ஊடாக வீட்டுத்திட்டம் ஒன்று அமைக்கப்பட்டு கனகர் கிராமம் என பெயர் சூட்டப்பட்டது. 

1988 ஏற்பட்ட யுத்த அசம்பாவித நடவடிக்கையால் இந்தியப்படையினரால் மக்கள் வெளியேற்றப்பட்டு மீண்டும் குடியேறினார்கள். பின் 1990 ஆம் ஆண்டு ஏற்பட்ட சிறீPலங்கா இராணுவ வன்முறைகள் மற்றும் யுத்தத்ம் காணமாக அகதிகளாக்கப்பட்டு இம்மக்கள் வெளிப்பிரதேசங்களான திருக்கோவில் ,அக்கரைப்பற்று, கோமாரி போன்ற பிரதேசங்களில் வாழ்ந்துவந்தனர். 

இம்மக்கள் 1994 காலப்பகுதிகளில் மீண்டும் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர அனுமதி கோரியபோது பயங்கரவாத அச்றுசுறுத்தல் இருப்பதாக காரணம் கூறப்பட்டு இராணுவத்தினரால் அனுமதி மறுக்கப்பட்டது. அதன் காரணமாக மக்கள் தொடர்ந்து வெளியிடங்களில் அகதிகளாகவே வாழ வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது. 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னரும் மீள் குடியமர அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன அம்மக்களின் குடியிருப்பு பிரேதேசம் முழுவதும் வனவள பாதுகாப்பு பிரதேசமாக பிரகடனப்படுத்தப்படுள்ளதாக கூறி மக்கள் மீள்குடியமர அரசு அனுமதி மறுத்து வருகின்றது. 

மக்களிடம் இக்காணிகளுக்கான உறுதிகள் உள்ளபோதிலும் இந்த நிலத்திற்குச் சொந்தக காரர்கள் தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக அரசு அப்பகுதியை சுவீகரிக்க முயல்கின்றது. 

இந்நிலப்பரப்பு கடற்கரையை அண்டிய நிலப்பரப்பாக உள்ளமையினால் இதனை மாற்று இனத்தவர்களுக்கு வழங்கும் நோக்கில் வனவள பாதுகாப்பு திணைக்களம் சுவீகரிப்பது போன்ற நிலையை உருவாக்கி மக்களை வெளியேற்றிவிட்டு மக்களை வேறு இடங்களில் குடியேறச் செய்த பின்னர் குறித்த காணிகளை ஏனைய இனத்தவர்களுக்கு வழங்கும் திட்டத்துடனேயே அரசியல் வாதிகளும் அரசும் வனவளப் பாதுப்பு அதிகாரிகளும் செயற்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தம்மை மீளக்குடியமர அனுமதிக்க கோரி மக்கள் போராட்ட களமொன்றை திறந்துள்ளனர்.

No comments