மைத்திரி வந்தார்: தையிட்டிக்கு புத்தரும் வருகின்றார்?


இலங்கை ஜனாதிபதி மயிலிட்டி வந்து திரும்பியுள்ள நிலையில் காங்கேசன்துறை தையிட்டியில் புதிய விகாரைக்கான அடிக்கல்லை வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் கூரே நாட்டிவைத்துள்ளார்.கடந்த 30 வருடங்களாக இராணுவ பிடியினுள் இருந்தவேளை கட்டப்படாத திஸ்ஸவிகாரையை மீள்புனர்நிர்மாணம் செய்வதற்கான நிகழ்வு பாதகட விமலஞான தேரர் தலைமையில் நேற்று (22) பிற்பகல் நடைபெற்றுள்ளது.

இதில் பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே கலந்து கொண்டு விகாரை அமைவதற்கான அடிக்கல்லினை நாட்டிவைத்தார். 

1946ம் ஆண்டு எழுதப்பட்ட உறுதி அடிப்படையில் பாதகட விமலஞான தேரர் குறித்த விகாரைக்குரிய காணியினை இனங்கண்டு அதனை மீள நிர்மாணிப்பதற்கான பணிகளை ஆரம்பித்துள்ளார். குறித்த விகாரை பல நூற்றாண்டுகளாக இப்பகுதியில் இருந்துவந்துள்ளது. 1954.05.17 ம் திகதி இறுதியாக வெசாக் பண்டிகை கொண்டாப்பட்டுள்ளது. இதன் பின்னர் நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தினால் குறித்த விகாரை முற்றாக அழிவடைந்திருந்தது. அதனை மீள் நிர்மாணம் செய்யும் பணிக்கான ஆரம்ப வேலை நேற்றயதினம் சுப நேரத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.

வடமாகாணசபை கலைக்கப்பட்ட பின்னர் விகாரைகளை நிறுவ ஆளுநர் தயாராவதாக முதலமைச்சர் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில் அதனை ஆளுநரோ மறுதலித்துள்ளார்.

30வருடங்கள் படையினரின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கப்பட்ட தையிட்டியில் மைத்திரி தங்கியிருந்த நிலையில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளமை முதலமைச்சரின் குற்றச்சாட்டுக்களினை மெய்ப்பித்துள்ளது.

No comments