தலைமறைவு அதிகாரிக்கு தகவல்கள் செல்கின்றதா?


புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரி யான சுவிஸ்குமாரை விடுவிக்க உதவியதாக காவல்துறை அதிகாரிகளுக்கு எதிரான வழக்கின் விசாரணைகள் முக்கிய கட்டத்தை அடைந்துள்ளது.தற்போது தலைமறைவாக இருந்துவரும் முக்கிய சாட்சிகளுள் ஒருவரான காவல்துறை உபபரிசோதகர் சிறிகஜனுடன் தொடர்புகளை கொண்டுள்ள நபர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளள.

சுவிஸ்குமாரை தப்பிக்க உதவியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள வடக்கு மாகாண முன்னாள் மூத்த பிரதி காவல்துறை அதிபர் லலித் ஏ ஜெயசிங்க மற்றும் உப காவல்துறை பரிசோதகர் சிறிகஜன் ஆகிய் அதிகாரிகளின் தொலைபேசிஉரையாடல்கள் கண்காணிக்கப்பட்டுவந்திருந்தது.இந்நிலையில் நீதிமன்ற நகர்வுகள் மற்றும் விசாரணைகள் என்ற பேரில் ஊடகவியலாளர்களாக தகவல் திரட்டி தலைமறைவாக உள்ள அதிகாரிக்கு தகவல் வழங்கியமை தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோக நாதன் படுகொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியாக கூறப்படும் சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் என்பவரை விடுவித்து உதவினார்கள் என்ற குற்றச்சாட்டில் வடக்கு மாகாண முன்னாள் மூத்த பிரதிப் காவல்துறை மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க மற்றும் உப காவல்துறை பரிசோதகர் சிறிகஜன் ஆகியோருக்கு எதிராக குற்றப் புல னாய்வுப் பிரிவினரால் ஊர்காவற்றுறை நீதி வான் மன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதில் மூத்த பிரதி காவல் மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் இருந்து பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். உப காவல்துறை பரிசோதகர் சிறிகஜன் தலைமறைவாகி உள்ளார். அவருக்கு எதிராக நீதிமன்றால் பகிரங்கப்பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன் றில் நீதவான் ஏ.ஜூட்சன் முன்னிலையில் கடந்த ஜூன் 20ஆம் திகதி விசாரணைக்கு வந்தது.

இதன்போது வழக்குத் தொடுநர் சார்பில் முன்னிலையான அரச சட்டவாதி, “இந்த வழக்கின் விசாரணைகள் முற்றுப்பெற்று வழக்கின் கோவை தற்போது சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு கையளிக்கப்பட்டு ள்ளது” என மன்றில் தெரிவித்தார்.

இதையடுத்து இந்த வழக்கு வரும் ஒக் டோபர் மாதம் 10ஆம் திகதிவரை ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றால் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கில் குற்றஞ் சாட்டப்பட்டுள்ள் லலித் ஏ ஜெயசிங்க மற்றும் சிறிகஜன் ஆகிய பொலிஸ் அதிகாரிகளின் தொலைபேசி உரையாடல் தொடர்பான அறிக்கையின் பிரகாரம் டாண் தொலைக்காட்சியை சேர்ந்த நடராஜா குகராஜா என்பவரை விசார ணைக்கு வருமாறு கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அழைப்பு அனுப்பியுள்ளனர்.

இதனிடையே புதிய தகவல் ஒன்றின் அடிப்படையில் மறைந்துள்ளதாக சந்தேகிக்கப்படும் சிறீகஜனிற்கு தகவல்கள் சென்றடைவது தொடர்பில் புதிய திசையில் விசாரணைகள் நடைபெறவுள்ளதாக தெரியவருகின்றது.

No comments