யாழில் பௌத்தம்:சீனாவும் ஆராய வருகின்றதாம்?


யாழ்ப்பாணத்தில்  முன்னெடுக்கப்படும் தொல்லியல் ஆய்வுகளின் பின்னணயில் வருமானத்தை மட்டும் பார்க்கும் தரப்பாக யாழ்.பல்கலைக்கழக துறைசார்ந்தவர்கள் செயற்படுவதாக குற்றச்சாட்டுக்கள் வலுத்துள்ளன.சர்வதேச தரப்புக்கள் சில சிங்கள பௌத்த வாதத்தினை நிலைநிறுத்தும் வகையில் ஆய்வுகளில் மும்முரமாக தமிழர் தாயகப்பகுதிகளில் குதித்துள்ளன.அவ்வாறான ஆய்வுகளில் முன்னைய காலங்களில் பௌத்தம் வடக்கில் நிலைத்திருந்தது என்பதை உறுதிப்படுத்தும் சான்றாதாரங்களை தேடுவதையே அவை முனைப்பாக கொண்டுள்ளன.

அத்தகையதொரு ஆய்வு யாழ்.கோட்டையில் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் 2700 வருடகால தொன்மை சான்றாதாரங்கள் கண்டெடுக்கப்பட்டிருந்தது.அதனை மறைத்து வைக்க முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்ட போதும் ஊடக அழுத்தங்களால் உண்மை வெளிக்கொணரப்பட்டிருந்தது.இந்த ஆய்விற்கு யுனெஸ்கோ அமைப்பு நிதி வழங்கியிருந்து.

இந்நிலையில் குடாநாட்டில் மேலும்   இரு பகுதிகளில் வரலாற்று கால தொல்லியல் சான்றுகளை மீட்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி பருத்தித்துறை துறைமுகப் பகுதியில் காணப்படும் ஒல்லாந்தர் கால கோட்டை மற்றும் அதற்கு முற்பட்ட கால துறைமுக சான்றுகளை மீட்கும் வகையில் இவவாய்வு பணிகள் ஆரம்பிக்கப்படுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் அத்துறைமுகம் புனரமைக்கப்படவுள்ள நிலையில் அதற்கு முன்னதாக அங்கிருக்கும் வரலாற்று தொல்லியல் சான்றுகளை மீட்பதற்காக தொல்லியல் திணைக்களம் ஆய்வு பணிகளை ஆரம்பித்துள்ளது.

இதேபோன்று அல்லைப்பிட்டி பகுதியிலும் பண்டைய சீன பொருட்களை கண்டறியும் நோக்கில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மத்திய கலாச்சார நிதியத்தினரும் சீன அரசாங்கமும் இணைந்து இவ் ஆய்வு பணியினை முன்னெடுத்து வருகின்றன.

வரலாற்று காலத்தில் இப் பகுதிக்கு வந்திருந்த சீன கப்பலொன்றிலிருந்து கொண்டுவரப்பட்ட சீனப் பொருட்களை மீட்கும் வகையிலேயே இவ் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முன்னதாக பிரிட்டிஸ் ஆய்வாளர்கள் யாழ்.கோட்டையில் ஆய்வுகளை மேற்கொண்டுவருகின்ற நிலையில் தற்போது சீனநாட்டவர்களும் களமிறங்கியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments