உரிய நேரத்தில் தேர்தல் ?


ஜனநாயக நாட்டின் ஆட்சி அதிகாரம் மக்கள் விருப்பத்தின் அடிப்படையில் அமைவதால் உரிய நேரத்தில் தேர்தலை நடத்த வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இன்று (23) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தொடர்பான 30 ஆவது சரத்தின் 21 ஆவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு நாட்டின் ஆட்சி அதிகாரம் மக்கள் விருப்பத்தின் அடிப்படையில் அமைய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments