வடக்கிலும் வெல்லுமாம் மகிந்தவின் கட்சி
எல்லை நிர்ணய அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு தீர்மானித்துள்ள மகிந்த ராஜபக்ச தலமையிலான கூட்டு எதிரணியினர் எந்த முறையில் தேர்தல் நடத்தப்பட்டாலும் தெற்கில் மட்டுமன்றி வடக்கிலும் மாகாண சபையையும் தாம் வெற்றி கொள்ளம் என தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் இன்று (23) இடம்பெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பின் போது கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கணக ஹேரத் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எல்லை நிர்ணய அறிக்கையில் சில சந்தர்ப்பங்களில் கூட்டு எதிர்க்கட்சிக்கு அசாதாரணம் இழைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் சிலரும் இந்த அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment