நிரந்தர நியமனம் வழங்குவதாக இலஞ்சம் வாங்கிய ஆனோல்ட் ?


யாழ் மாநகசரபையின் நிரந்தரமாக்கப்படாமல் பணியாற்றும்  ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதாக யாழ் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனோல்ட் இலஞ்சம் பெற்றுள்ளதாக முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

ஈபிடியின் ஆட்சிக்காலத்தில் அரசியல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக வகை தொகையின்றி பலருக்கு யாழ் மாநகரசபையில் சிற்றூழியர் நியமனங்கள் வழங்கப்பட்டன. எனினும் அவர்களில் எவருக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் புதிதாக பதவியேற்ற யாழ் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனோல்ட் 50 பணியாளர்களிடம் அவர்களை நிரந்தரமாக்குவதாகக்க கூறி தலா 50 ஆயிரம் ரூபா பெற்றுக்கொண்டதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

எனினும் தமக்கான நியமனங்கள் இதுவரை வழங்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ள ஊழியர்கள் தாங்கள் நீண்டகாலமாக நிதரந்தரமாக்கப்படாத பணியாளர்களாகப் பணியாற்றுவதாகவும் தாங்கள் பணம் கொடுத்த விவரம் வெளித்தெரிந்தால் தாங்கள் வேலையினை இழக்க நேரிடலாம் எனவும் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

No comments