பிரான்சில் கத்திக் குத்து! ஒருவர் பலி! இருவர் காயம்!

பிரான்ஸ் தலைநகர் பாரிசிலிருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள டிராப்பர்ஸ் நகரில் இன்று மீண்டும் கத்திக்குத்து சம்பவம் நடந்துள்ளது. அடையாளம் தெரியாத நபர்கள் பொதுமக்களை இலக்கு வைத்து நடத்திய கத்திக் குத்துத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். 

தற்போது, கத்திகுத்து தாக்குதலில் ஈடுபட்ட நபரை பிரான்ஸ் காவல்துறையினர் சுற்றிவளைத்து சுட்டுக்கொன்றுள்ளதாக பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இத்தாக்குதலுக்கும் பயங்கரவாத்திற்கும் தொடர்பு இருக்கின்றதா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

No comments