அம்பாறையில் 10வது நாளாகத் தொடரும் நிலமீட்புப் போராட்டம்!

அம்பாறை, பொத்துவில் பிரதேசத்தில் உள்ள கனகர்கிராம தமிழ்மக்கள் நில மீட்புப் போராட்டத்தை தொடர்ச்சியாக இரவு பகலாக நடத்தி வருகின்றனர்.

இன்று வியாழக்கிழமை 10வது நாளாக இரவு பகலாக தொட நிலமீட்புப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

வனவிலங்கு ஜீவராசிகள் திணைக்களத்தினால் பிடித்து வைக்கப்பட்டுள்ள தமது காணியினை தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரியே  இன்று (23) வியாழக்கிழமை 10வரு நாளாகவும் தொடர்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப் போராட்டத்திற்க்கு அரசியல்வாதிகளும், பொதுநல அமைப்புக்களும் தமது ஆதரவினை வழங்கிவருகின்றன.

கடந்த 28 வருடங்களாக பொத்துவில் கனகர்கிராமத்து மக்களின் குடியிருப்புக்காணியினை வனவிலங்கு ஜீவராசிகள் திணைக்களம் இது தமக்குரிய பகுதியென கையகப்படுத்தி எல்லைகள் இட்டு கனகர்கிராமத்து மக்களை அதனுள் செல்லவிடாது தடுத்துவருகின்றனர். 1981 இல் 30 வீடுகள் இங்கு இருந்துள்ளன. 70 வருடங்களுக்கு முன்பும் வளமோடும் செழிப்போடும் 270 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் சேனைப்பயிர்ச்செய்கை செய்து வசித்துவந்துள்ளனர்.

கடந்த கால யுதத்த சூழலில் பல தடவைகள் இடம் பெயர்ந்த கனகர் கிராம மக்களின் காணியினை இராணுவத்தினரும், வனவிலங்கு திணைக்களமும் மாறி மாறி பிடித்துவைத்துள்ளனர். இந் நிலையில் இம் மக்களின் காணியினை 28 வருடங்களாக வனவிலங்கு பகுதியினர் அடத்தாக பிடித்து வைத்துள்ளனர்.

28 வருடங்களாக பொறுத்துப்பார்த்த மக்கள் இன்று வீதிக்கு இறங்கி போராட்டத்தில் குதித்துள்ளனர். இன்று (23) வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில்இனியும் அரசியல் வாதிகளின் வாக்குறுதியை நம்பி ஏமாற நாம் தயாராகயில்லை அம்மக்கள் கூறியுள்ளனர்.

No comments