விசயகலா வீட்டிற்கு:சதியென்கின்றனர் ஆதரவாளர்கள்!

விடுதலை புலிகள் அமைப்பை உருவாக்குவதே எமது நோக்கம் என சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த, சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ளப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.இதனிடையே அவரது அமைச்சுக்கள் தற்காலிகமாக பறிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஜனாதிபதி அலுவலகம் இன்றிரவு அறிவித்துள்ளது.

இதனிடைளே தமிழ் மக்களின் அரசியல், சுயநிர்ணய உரிமைகளை வழங்காமலும், முள்ளிவாய்க் காலில் கொல்லப்பட்ட எங்கள் உறவுகளின் ஆழிவுக்கு நீதியான தீர்வு எதுவும் கிடைக்காத நிலையிலும், வலிந்து காணாமல் ஆக்கப் பட்டவர்கள் தொடர்பில் உண்மைத் தன்மையும், சிறைக் கூடங்களில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக எத்தகைய நடவடிக்கையும் எடுக்காமலும் இந்த அரசு வைத்திருக்கின்றது.

இழப்புக்களையும், துன்பங்களையும் கடந்த 30, வருடங்களாக சந்தித்த மக்கள் மனங்களில் மீண்டும் மீண்டும் ரணப்படுத்தும் சம்பவங்கள் தோற்றுவிக்கப்படும் போது, சில ஆதங்கத்தை வெளிப்படுத்துவது மனித இயல்பு.

அவ்வாறான ஒரு நிலையில் சுழிபுரம் காட்டுப் புலத்தில் 06, வயதுடைய பாடசாலை மாணவிக்கு ஏற்பட்ட துயரத்தை கண்டு இதயம் வருந்திய நிலையில் விஜகலா மகேஸ்வரன் தன்னிலை மறந்து ஆற்றிய உரையினை திரிபு படுத்தி செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் மக்களின் மனங்களில் உள்ள ஒரு ஆதங்கத்தை தெரிவிக்கும் தமிழ் உணர்வாளர்களை காட்டிக் கொடுத்து அவர்களின் வாழ்க்கையை சிதைப்பதில்; ஆனந்தத்தை சிலர் அடைந்துள்ளனர்.

No comments