ரணில், மைத்திரியை நீதிமன்றில் ஆஜராக உத்தரவு


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜராக வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது பொதுவேட்பாளராக களமிறங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருக்கிடையில் இரகசிய ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டதாக போலி ஆவணங்களை வெளியிட்டதாக ஐ.தே.கவின் முன்னாள் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணையின் சாட்சியாளர்களாக ஜனாதிபதி மற்றும் பிரதமரே பெயரிடப்பட்டுள்ளனர்.

இந்நி​லையில் குறித்த வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விகும் களுவாராச்சி முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டப்போதே மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments