பலாலி விமான நிலைய காணியை விடுவிக்கட்டும்: முதலமைச்சர்


பலாலி விமான நிலையத்திற்கென படையினர் கையக்கப்படுத்தி வைத்;திருப்பது சட்டவிரோதமானதென வடக்கு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கொழும்பு சிவில் வானூர்தி இயக்கியல் திணைக்களப் பணிப்பாளருக்கு வடமாகாண முதலமைச்சரால் கடிதம் ஒன்று அனுப்பிவைக்கட்டுள்ளது.

இலங்கை பிரதம மந்திரி அவர்கள் சென்ற தடைவ வந்த போது காணி கையகப்படுத்துவது சம்பந்தமாக உரிய நிறுவனத்துடன் பேசித் தீர்க்குமாறு கூறியதன் காரணத்தினால்தான் குறித்த கடிதத்தை அனுப்புவதாக முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விமானத்தளத்திற்கான காணி முதலில் 1950ம் ஆண்டு வானூர்தி இயக்கியல் திணைக்களத்தினால் கையேற்கப்பட்டது. மொத்தமாக 456 காணித் துண்டுகள் கையேற்கப்பட்டன. அவற்றின் மொத்த விஸ்தீரணம் 349 ஏக்கர.
அதன் பின் 1986ம் ஆண்டில் காணிகையேற்புச் சட்டத்தின் பிரிவு 2இன் கீழ் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட காணிகளையுஞ்சேர்த்து மேலதிக காணிகளை பலாலிவிமானத்தள விஸ்தரிப்புக்காக அவசர காலச் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு அமைச்சு கையேற்பதாக அறிவித்தல் பிரசுரிக்கப்பட்டது. குறித்த கையேற்பின் கீழ் அடையாளப்படுத்தப்பட்டகாணி 426 ஏக்கர். இந்தக்காணி முன்னர் குறிப்பிடப்பட்ட 349ஏக்கர் காணியையும் அதனுள் அடக்கியிருந்தது. 

1987ம் ஆண்டில் மேலும் 646 ஏக்கர் காணி இராணுவத்தால் கையகப்படுத்துவதாக அறிவித்தல் பிரசுரிக்கப்பட்டது. இவற்றை விட மேலும் 6500 ஏக்கர் காணி மேலதிகமாக படையினரால் கையேற்கப்பட்டுள்ளன.

அவசரகாலச் சட்டத்தின் கீழ் கூட பாதுகாப்பு அமைச்சின் செயலாளரால் பலாலிவிமானத்தள விஸ்தரிப்புக்காகமேலதிகக் காணி கையகப்படுத்தமுடியாது. ஏனென்றால்அதில் ஒரு பகுதி வானூர்தி இயக்கியல் திணைக்களத்தினால் ஏற்கனவே 1950ல் கையேற்கப்பட்டுவிட்டது. விமானத்தள விஸ்தரிப்புக்கான காணி வானூர்தி இயக்கியல் திணைக்களத்தினால் தான் கையகப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்காக பணிப்பாளருக்கு வடமாகாண முதலமைச்சர் அறிவுரை வழங்கியுள்ளார்- 

1. மேற்குறிப்பிட்ட 349 ஏக்கர் காணியை படையினர் உடனேயே வானூர்திகள் இயக்கியல் திணைக்களத்திற்குக்கையளிக்கவேண்டும். 

2. மேலதிகமாக அவசரகாலச் சட்டத்தின் கீழ் விமானத்தளம் அமைப்பதற்காகக் கையேற்கப்பட்ட காணிகளை உடனேயே பணிப்பாளரிடம் கையளிக்குமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் கோரவேண்டியது அவசியம்.

3. குறித்த காணிகள் பணிப்பாளரிடம் கையளித்தபின் இந்திய அரசிடம் இருந்து பலாலி விமானத்தளத்தை அமைப்பதற்குத்தேவையான காணி எவ்வளவு என்று அறிந்து அதனைக் கைவசம் வைத்துக் கொண்டு மிகுதிக்காணிகளை காணிச்சொந்தக்காரரிடம் கையளிக்கவேண்டும். 

குறித்த 349 ஏக்கர் காணிக்கு மேலதிகமாக காணி ஏதும் தேவையாக இருப்பின் அதற்கான கையேற்பு நடவடிக்கைகளைப்புதிதாகத்தொடங்கவேண்டும். 

எனவே மூலக் காணி வானூர்தி இயக்கியல் திணைக்களத்திற்கு உரித்தாகி இருந்தப டியால் மேலதிகக் காணிகள் சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கும் சட்டஉரித்து அந்தத்திணைக்களத்தையே சாரும் என்று பணிப்பாளருக்கு எடுத்துக் காட்டியுள்ளார். 

படையினர் தற்போது கையகப்படுத்திவைத்திருக்கும் காணிசட்டத்திற்குப் புறம்பாக கையேற்கப்பட்டவையே என்றும் பணிப்பாளருக்குத் தெரியப்படுத்தியுள்ளார். 

அண்மையில் பிரதமமந்திரியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கா முதலமைச்சரை யாழ்ப்பாணத்தில் சந்தித்த போது குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்ட அநேக விடயங்கள் தமக்கு இதுவரைகாலமும் தெரியாது இருந்தது என்பதையும் இப்பொழுது அதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பதாகவுந் தெரிவித்திருந்ததாகவும் முதலமைச்சரின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

No comments