என் இருப்பிடம் தேடி சிலரைச் சுற்றவிடப் போகிறேன் - மணிவண்ணன்


யாரோ ஏவிவிட்ட அம்பு ஒன்று தனது யாழ் மாநகரை உறுப்புரிமையை நீக்குமாறு கோரி வழக்குத் தொடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் யாழ் மாநகர உறுப்பினருமான சட்டத்தரணி வி.மணிவண்ணன் மனுவைத் தாக்கல் செய்த நபர் ஒன்றும் தெரியா அப்பாவி எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தனது யாழ் மாநகரை உறுப்புரிமையை நீக்குமாறு கோரி உச்சநீதிமற்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருப்பது குறித்து மணிவண்ணன் இன்று யாழ் ஊடக அமையத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்தார். அங்கு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அவர்,

என்னை பதவி நீக்க வலியுறுதியும் அதற்கு முதற்கட்டமாக நான் யாழ் மாநகரச சபை அமர்வுகளில் பங்பேற்பதற்கு இடைக்காலத் தடை விதிக்குமாறு கோரியும் பாசையூரைச் சேர்ந்த ஒருவரது பெயரில் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மனுத் தாக்கல் செய்தவர் ஒரு அப்பாவி என்று எனக்குத் தெரியும். வழக்குத் தொடுப்பதில் பின்னணியில் நின்றவர்கள் யார் என்றும் எனக்குத் தெரியும். அவர்கள் பாவம். என் இருப்பிடம் எதுவென்று அவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. என் இடம் தேடி அவர்களை அலைந்து திரியும் படி சுற்றவிடப்போகின்றேன் என்றார்.

இதேவேளை தன்மீது வழக்குத் தாக்கல் செய்ய பின்னின்றவர்கள் வீணாக தன்னைப் பற்றி ஆராய்வு செய்வதில் நேரகாலத்தைச் செலவிடாது மக்களுக்காக உருப்படியாக ஏதாவது செய்வதற்கு முயற்சிக்காலம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments