நவாலி தேவாலய படுகொலை நினைவேந்தல் நிகழ்வு உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு

வடதமிழீழம், இலங்கை விமானப் படையினர் நடத்திய மிகப்பெரிய மனிதப்படுகொலைகளில் ஒன்றான நவாலி படுகொலையின் 23வது நினைவுநாள் இன்றாகும்.

இன்று நவாலி சென்.பீற்றர் தேவாலயத்தில் சிங்கள இனவாத அரசின் வான் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைவு கூர்ந்து திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு ,படுகொலையின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவு தூுபியில் சுடரேற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது

நிகழ்வில் வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன், மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், சஜீவன், மற்றும் படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் உறவுகள், பொது மக்கள், அருட்சகோதரர்கள், சிறுவர்கள் என பலர் கலந்து கொண்டனர்
No comments