வேண்டாப்பெண்டாட்டி எதனை தொட்டாலும் குற்றமாம்?

வயோதிபம் மற்றும் அவசர தன்மை குறித்து முதலமைச்சர் உதவியாளர் ஒருவருடன் கொழும்பிற்கு பயணிப்பது சாதாரணமானதென முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக்கட்சியின் பின் கதவு உறுப்பினரொருவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரது தூண்டுதலில் தகவல் அறியும் சட்டத்தினில் பெற்ற தகவலொன்றினில் 2014 தொடக்கம் 2018 வரையிலான காலகட்டத்தில் விமானம் மூலம் கொழும்பு சென்று வந்ததால் இருபது இலட்சம் வரையிலான பொதுமக்களின் பணம் செலவுசெய்யப்பட்டுள்ளதென அறியப்பட்டிருந்தது.இதனை கட்சிப்பத்திரிகை கொண்டாட பல ஊடகங்களும் பிரதி பண்ணி செய்தி வெளியிட்டிருந்தன.

அதற்கு  பதிலளித்துள்ள முதலமைச்சர் உத்தியோகபூர்வகடமையின் நிமித்தம் வடக்குமாகாணமுதலமைச்சர்  அவர்களும் பாதுகாப்புபொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் விமானம் மூலம் 2014ல் இருந்து இன்றுவரைகொழும்புசென்றுவந்தமைக்கானவிமானக்கட்டணக் கொடுப்பனவுமுதலமைச்சருக்கு ரூ.1,115,500, பொலிஸ் உத்தியோகத்தருக்குரூ. 694000, ம் செலவிடப்பட்டுள்ளது.

இதனை கேட்கப்பட்ட போது நானே வெளியிடுமாறு பணித்தேன். முதலமைச்சர் விமானத்தில் போகவேண்டிய காரணம் துரிதமும்,பாதுகாப்பும்,உடல் வசதியும் ஆவன. மற்றைய மாகாண முதலமைச்சர்கள் அவ்வாறு பயணம் செய்வதில்லை என்று கூறப்பட்டது. இலங்கையில் கொழும்பில் இருந்து ஆகக் கூடியதூரத்தில் மாகாணசபை அமைந்திருக்கும் இடம் யாழ்ப்பாணமே. பொதுவாக வாகனங்கள் கொழும்புக்குப் பயணம் செய்வதானால் ஏழு மணித்தியாலங்கள் தேவை. ஏழு மணித்தியாலங்கள் பயணம் செய்துவிட்டு அதே நாளோ மறு நாளோ உத்தியோகபூர்வ கூட்டங்களில் கலந்து கொள்வது வடமாகாண முதலமைச்சருக்கு மட்டும் ஏற்படக் கூடிய இக்கட்டாகும். மேலும் அவ்வாறான பயணத்தில் ஈடுபடும் ஒரேதமிழர் வடக்குமாகாணமுதலமைச்சர் மட்டுமே.அவரே நான்கு மணித்தியாலங்களுக்கு சிங்களப் பிரதேசங்களில் பயணிக்கவேண்டியவர்.

  இலங்கையில் 75 வயதிற்கு மேற்பட்ட முதலமைச்சர் வடமாகாண முதலமைச்சர் மட்டுமே.பொலிசார் பாதுகாப்பு நிமித்தம் எனக்களித்த அறிவுரையின் பிரதிபலிப்பே விமான மூலப்பயணம்.இதற்கான அப்போதைய ஆளுநரின் அனுமதி கிடைத்தது. அப்போதையஆளுநர் 15 தொடக்கம் 20 வரையிலான விசேட அதிரடிப்படையினரைத்தமது பாதுகாப்புக்கு ஈடுபடுத்தினார். வுhகன எரிபொருள்,அதிரடிப்படையினர் செலவுகள் என்று அவர்களின் செலவு பற்றி எவருமே மூச்சுவிடவில்லை. தற்போது இளந்தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட அவ்வாறான பாதுகாப்பைக்கேட்டுப் பெற்றுள்ளனர். 
இது இவ்வளவுக்கும் என்னுடன் இரண்டு அல்லது மூன்று பொலிசாரே உள்;ரில் பாதுகாப்புக்கு வருகின்றார்கள்.ஒருவரையே விமானப் பயணத்தின் போது கொண்டு செல்கின்றேன்.விமானப்படையினரின் விமானப் பயணங்களின் போது பொலிசாருக்குக் கட்டணம் அறவிடப்படுவதில்லை. 
மேலும் தமது பாதுகாப்புப் பற்றிய இவ்வாறானவிபரங்களைஎவரும் வெளியிடுவதில்லை.காரணம்,முதலமைச்சரை வேண்டாதவர்கள் இத்தரவுகளை தமக்கு அனுசரணையாகப் பாவிக்கலாம்.ஆனால் மக்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்யவும் முதலமைச்சருக்கு எதிராகத் திட்டமிட்டுப் பரப்பப்படும் சந்தேகத்தை ஏற்படுத்தும் கேள்விகளுக்குப் பதில் இறுக்கவும் உண்மையானது வெளிப்படுத்தப்படுகின்றதென முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

No comments