கோத்தாவைச் சந்திக்க விக்கி மறுப்பு !


வடக்கில் சிறிலங்கா இராணுவம் தொடர்பான சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதற்கு, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்திக்க தான் விரும்பிய போதும் அவர் மறுத்து விட்டார் என்று கோத்தாபய ராஜபக்ச கூறியுள்ளார்.

கொழும்பு தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

“வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை சந்திக்க வேண்டும் என  நான் கேட்டேன். இராணுவம் தொடர்பான சிக்கல்களுக்கு தீர்வு காணவே அவருடன் பேச்சு நடத்த கேட்டேன்.

அந்தப் பேச்சுக்கு வடக்கு மாகாண முதல்வர் இணங்கினார். நாளும்   இடமும், நேரமும் ஒதுக்கப்பட்டன.

எனினும் சந்திப்புக்கு அரை மணி நேரத்திற்கு முன்னர், விக்னேஸ்வரன் முடியாது என்று கூறிவிட்டார்.

கூட்டமைப்பின் உயர்மட்டத்தரப்பின் கோரிக்கைக்கு அமையவே அவர் அதனை மறுத்தார்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments