சட்டம்,ஒழுங்கு அமைச்சர் யாழில்:கொள்ளைகளோ தாராளம்!

யாழில் இலங்கையின் சட்டம் ஒழுங்கு அமைச்சர் மற்றும் காவல்மா அதிபர் தங்கியிருக்கையில் நள்ளிரவில் வீடுபுகுந்தவர்கள் மூன்று பெண்களைக் கட்டி வைத்து கொள்ளையிட்டுள்ளனர்.

ஒருபுறம் இன்று வடமாகாண முதலமைச்சரினை அவரது அலுவலகத்தில் வைத்து அமைச்சர் சந்தித்து பேசியுமுள்ளார்.

யாழ்ப்பாணம் உரும்பிராய்ப் பகுதியில் வீட்டினுள் உள்நுழைந்த திருடர்கள் வீட்டிலிருந்த பெண்களைச் சரமாரியதாகத் தாக்கியதுடன் அவர்களைக் கட்டி வைத்துப் பெறுமதியான தங்க நகைகளைத் திருடிச் சென்றுள்ளனர்.

யாழ்ப்பாணம் உரும்பிராய்ப் பகுதியில் வீட்டினுள் உள்நுழைந்த திருடர்கள் வீட்டிலிருந்த பெண்களைச் சரமாரியதாகத் தாக்கியதுடன் அவர்களைக் கட்டி வைத்துப் பெறுமதியான தங்க நகைகளைத் திருடிச் சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை(12)அதிகாலை இடம்பெற்றுள்ளது.
நேற்றைய தினம் அதிகாலை வேளையில் வீட்டுக்குள் உள்நுழைந்த திருடர்கள் பெண்களைத் தாக்கி அவர்களைக் கட்டிவைத்து வீட்டிலிருந்த பெண்கள் அணிந்திருந்த தங்கநகைகள் ஆகியவற்றைத் திருடிச் சென்றுள்ளனர்.

திருடர்களின் தாக்குதலுக்குள்ளான பெண்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆறு பவுண் தங்கநகைகளே இவ்வாறு திருடப்பட்டுள்ளது.

No comments