உள்ளூர் விவசாயத்தை மேம்படுத்த முயற்சி!

விவசாயம் மற்றும் உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்கவும் உரிய சந்தைவாய்ப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் முன்வருமாறு நல்லூர் பிதேசசபை உறுப்பினர் தெ.கிரிதரன் அழைப்பு விடுத்துள்ளார்.


தற்போது யாழ் குடாநாட்டில் பெரும்பாலும் விவசாயம் மற்றும் அனைத்து உற்பத்திப்பொருட்களும் வெளி மாவட்டங்களில் இருந்து இறக்குமதி செய்கின்ற ஓர் துர்ப்பாக்கிய நிலைக்கு யாழ் மாவட்டம் தற்போது உருவாகியுள்ளது. இதற்கு முன்னைய காலங்களில் அனைத்து விவசாயம் மற்றும் உற்பத்திப்பொருட்கள் யாவும் யாழ் குடாநாட்டிலே உற்பத்தி செய்யப்பட்டு மேலதிகமாக வெளிமாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட வரலாறுகளும் உண்டு.  தற்போது கூடுதலான விவசாயப் பொருட்கள் வெளி மாவட்டங்களில் குறிப்பாக தம்புள்ளை சந்தையில் இருந்து யாழ் குடாநாட்டுக்கு மிகக் குறைந்தவிலையில் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றது. யாழ்ப்பாணத்தில் உற்பத்தி செய்யப்படும் விவசாயப் பொருட்களுக்கு அதிக விலை கொடுத்து வாங்கவேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் மக்கள் கூடுதலாக அவ் உற்பத்திப் பொருட்களை கொள்வனவு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். உள்ளூர் உற்பத்திகளுக்கு உரிய சந்தைவாய்ப்பு வசதி மற்றும் அவர்களின் ஆகக்குறைந்த உற்பத்திச் செலவேனும் ஈடுசெய்துகொள்ள முடியாத நிலைக்கு யாழ் மாவட்ட உற்பத்தியாளர்கள் உருவாகி உள்ளனர். 

அவர்கள் தங்களுடைய பாரம் பரிய தொழிலைக் கைவிட்டு பல்வேறுபட்ட இதர தொழில்களை நாடிச்செல்கின்ற சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது. இதற்குப் பிரதான காரணம் அவர்களுக்கு போதிய ஊக்குவிப்பு செயற்திட்டங்கள் செயற் படுத்தப்படாமையை இதனால் நல்லூர்ப் பிரதேசசபையினால் அவர்களை ஊக்குவிக்கும் நோக்கிலும் மற்றும் சந்தைவாய்ப்பு வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கும் நோக்கிலும் குறைந்த வட்டிவீதத்திலும் கடன் உதவி மற்றும் மாணிய அடிப்படையில் உள்ளீடுகளை வழங்குவதன் மூலம் அவர்களின் உற்பத்திச்செயற் பாடுகளை துரிதமாக முன்னெடுத்து உள்நாட்டு வருமானத்தை பெருக்குதல் மட்டுமல்லாமல் அவர்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தக்கூடியதாக இச் செயற்றிட்டம் அமையுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments