குளத்தில் வெடிபொருட்கள்: தேடுதலிற்கு முடிவு!

இலங்கைப்படையினர் குளமொன்றில் ஆயுதங்களை தேடித்திரிந்த நிலையில் யாழ்ப்பாணம் மணியந்தோட்டம்,பகுதியிலுள்ள குளமொன்றில் அவை பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாவென்ற சந்தேகம் எழுந்துள்ளது.

யாழ்.பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் குறித்த குளம் புனரமைப்புக்கு உட்படுத்தப்பட்ட போது, அதிலிருந்து புகை வெளிப்பட்டதை அடுத்து, குளத்தின் புனரமைப்புப் பணிகள், தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து இன்று (24) காலை, சம்பவ இடத்துக்குச் சென்றுள்ள பிரதேச செயலக அதிகாரிகள், கிராமசேவகர் மற்றும் காவல்துறையினர், குளத்தைப் பார்வையிட்டதோடு, இச்சம்பவம் குறித்து யாழ்.காவல் நிலையத்தில், முறைப்பாடொன்றும் பதிவு செய்துள்ளனர்.

குறித்த குளத்துக்குள் வெடிபொருட்கள் இருக்கலாமென அதிகாரிகளும் பிரதேச மக்களும் அச்சம் தெரிவிக்கும் நிலையில், விசேட அதிரடிப் படையினருடைய ஒத்துழைப்புடன், குளத்தை ஆய்வுசெய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நல்லூர் சந்திரசேகரப்பிள்ளையார் குளப்பகுதியில் வெடிபொருட்கள் இருப்பதான தகவல் ஒன்றில் இலங்கை படையினர் பெருமெடுப்பிலான தேடுதல் நடவடிக்கையினை ஒரு வாராத்திற்கு மேலாக நடத்தியிருந்தனர்.எனினும் வெடிபொருட்கள் ஏதும் மீட்கப்படாது அந்நடவடிக்கை கைவிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments