தீருவிலிலும் கூட்டமைப்பு குழப்படி!

சுமார் நான்கு மில்லியன் வடமாகாண முதலமைச்சர் நிதியில் தீருவில் பூங்கா அமைப்பதற்கு வல்வெட்டித்துறை நகரசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பூர்வாங்க வேலைகளை திட்டக்குழு மேற்கொண்டிருந்த நிலையில் கூட்டமைப்பின் தவிசாளர் குழப்பங்களை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி சபை விதியை மீறி நகர சபைக்கு தெரியாமல் கூட்டமைப்பு சார்பு தவிசாளர் கருணானந்தராசா மற்றும் செயலாளர் ஆகியோர் தீருவில் பூங்காக்குள் 12 அடி அகலமான வீதியொன்றை அமைக்க முற்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 

தீருவில் தூபி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட இம்மோசடி தொடர்பில் கட்சி எல்லைகளை தாண்டி மூன்றில் இரண்டு சபை உறுப்பினர்கள் இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு உள்ளூராட்சி ஆணையாளருக்கு கையொப்பமிட்டு கடித மூலம் கோரியுள்ளதாக தெரியவருகின்றது.

ஏற்கனவே வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினராக இருந்த போது தற்போதைய தவிசாளர் கருணாந்தராசா முறைகேடுகளில் ஈடுபட்டதாக சொல்லப்படுகின்றது.

மறைந்த கிட்டு உள்ளிட்ட போராளிகள் ஞாபகார்த்தமாகவும்,இந்திய அமைதிப்படை காலத்தில் பலிகொள்ளப்பட்ட குமரப்பா புலேந்திரன் உள்ளிட்ட போராளிகள் ஞாபகார்த்தமாக தீருவில் தூபி அமைக்கப்பட்டிருந்தது.எனினும் பின்னராக இலங்கை இராணுவத்தினால் அது இடிக்கப்பட்டு நிர்மூலமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments