பேரறிவாளனிற்கொரு நீதி:ஆனந்த சுதாகரனிற்கு வேறொன்றாம்!


அரசியல் கைதி ஆனந்த சுதாகரன் தொடர்பில் இந்திய பிரதமர் மோடியிடம் கொண்டு செல்லவுள்ளதாக யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதுவர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.தன்னை நேரில் சந்தித்து ஆனந்தசுதாகரனின் விடுதலை தொடர்பாக வடக்கு மாகாணக் கல்வி அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் கலந்துரையாடிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஆனால் ரஜீவ் கொலைக்குற்றஞ்சாட்டப்பட்டு தண்டனைக்காலம் முடிந்தும் காலவரையறையற்று தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்தியர்களான பேரறிவாளன்,நளினி மற்றும் இலங்கையை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட ஏழு பேரது விடுதலையை நியாயமற்று இந்திய மோடியரசு இழுத்தடிக்கின்ற நிலையில் ஆனந்தசுதாகரனின் விடுதலை பற்றி பேசுவதற்கான அருகதையினை கொண்டுள்ளாராவென கேள்வி எழுந்துள்ளது.

தாயை இழந்தும்,தந்தையைச் சிறையில் அடைக்கப்பட்டதாலும் அனாதரவாக்கப்பட்டு, வயதான பேத்தியாருடன்; வாழும்,இரு சிறுவர்களின் ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பும் மற்றும் இரு சிறார்களின் மன உளைச்சல் எதிர் காலத்தில் பாதிக்காத வகையில் அரசியல் கைதியான ,ஆனந்தசுதாகரனை ஜனாதிபதியின் கருணை அடிப்படையில் விடுவிக்கப்படவேண்டுமென வடக்குக் கிழக்கு,தெற்கு,மேற்கு என இலங்கையின் அனைத்துப் பிரதேசங்களிலும் வாழும் தமிழ் மற்றும் சமுக,அரசியல் அமைப்புக்கள் ஏராளமான கையெழுத்து;ப போராட்டங்களை நடாத்தியிருந்தன. அதனத் தொடர்ந்து ஆனந்தசுதாகரன் .கடந்த தமிழ்,சிங்கள புத்தாண்டளவில் விடுவி;ககப்படுவார் என்ற செய்தியும் ஜனாதிபதியிடம் இருந்து வெளிவந்தது. 

எனினும் அவரது விடுதலையை உத்தரவாதப்படுத்த மேலும் வலியுறுத்தல்கள் தேவை என்ற அடிப்படையில் பிள்ளைகளை நினைத்து தினமும் சிறையில் தவித்துக்கொண்டிருக்கும் ஆனந்தசுதாகரனை விடுதலை செய்யக்கோரி கடந்த சில மாதங்கலாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் மற்றும் வடமாகாணக் கல்வி அமைச்சின் அனுசரணையுடன்,வடமாகாண கல்விச் சமூகமாகிய கல்விமான்கள்,அதிபர்கள்,ஆசிரியர் கள் மற்றும் மாணவர்கள் ஆகியோரிடம் இருந்து 3 லட்சம்  கையெழுத்துக்கள் மாகாணக் கல்வி அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் அவர்களால் பெறப்பட்டு நேரடியாக ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டிருந்தது.  

அதனைத் தொடர்ந்து கடந்த வெள்ளியன்று 3 லட்சம்  கையெழுத்துக்கள்  மாகாணக் கல்வி அமைச்சரினதும்,இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தினரதும் கோரிக்கைக் கடிதங்களுடன்கூடிய மனு யாழ் இந்திய துணைத் தூதுவரிடம்  கையளிக்கப்பட்டிருந்தது.
தடுப்பில் உள்ள ஆனந்தசுதாகர் ஆயுதபயிற்சி பெற்ற ஒருவர் அல்லாது ஒரு அரசியல் கைதியாகவே இருப்பதால் அவரது குழந்தைகள் அநாதையாக்கப்படாது இருப்பதற்காக, இந்திய அரசு அவரது விடுதலையில் கவனம் எடுக்க வேண்டுமென கோரப்பட்டிருந்தது.

இவ்விடயத்தினை இலங்கையில் உள்ள இந்திய தூதுவரின் ஊடாக பாரதப் பிரதமரிடம் தெரியப்படுத்தி இலங்கை அரசிடம் சிறுவர்களின் எதிர்காலத்தையும் நலனையும் கருத்தில் கொண்டு இவ்விடயம் பற்றி கவனம் எடுப்பதாக  வடமாகாணக் கல்வி அமைச்சரிடம் நம்பிக்கை ஊட்டும் முகமாக யாழ் இந்திய துணைத்தூதுவர் திரு.எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்திருந்தார்.
அவரது கருத்தே தற்போது கேள்விக்குள்ளாகியுள்ளது.ரஜீவ் கொலையுடன் தொடர்புபடுத்தப்பட்ட அப்பாவிகளை தண்டனை காலம் முடிந்தும் விடுவிக்க இந்திய அரசு மறுத்துவருகின்ற நிலையில் ஆனந்தசுதாகரன் பற்றி பேச அருகதையுள்ளதாவென கேள்வி எழுந்துள்ளது.

இதனிடையே தமிழகத்தை சேர்ந்த ரஜீவ் கொலையுடன் தொடர்புபடுத்தப்பட்ட 27 வருடங்களாக சிறையிலுள்ள பேரறிவாளனது விடுதலை தொடர்பில் நம்பிக்கையிழந்துள்ள தாயார் அற்புதம்மாள் தனது மகனை கருணை கொலை செய்ய தற்போது கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.  

No comments