காஸா படுகொலை! ஐநாவில் இஸ்ரேலுக்கு ஆதரவான அமொிக்கத் தீர்மானம் படுதோல்வி!

காஸா எல்லையில் போராடும் பாலஸ்தீன மக்களின் உயிருக்கு பாதுகாப்பு கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக விவாதிக்க ஐக்கிய நாடுகள் சபையின் 72-வது கூட்டம் மற்றும் இந்த ஆண்டின் சிறப்பு அவசர கூட்டம் நேற்று கூடியது. அப்போது இந்த உயிரிழப்புகளுக்கு ஹமாஸ் போராளிகள் தான் காரணம் என, இஸ்ரேல் அரசுக்கு ஆதரவாக அமெரிக்கா தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தது.

இந்த தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடந்தது. அப்போது தீர்மானத்துக்கு ஆதரவாக 8 நாடுகள் மட்டுமே வாக்களித்தன. அதற்கு எதிராக 120 நாடுகள் வாக்களித்தன. 45 நாடுகளின் உறுப்பினர்கள் இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. இதனால் இந்த தீர்மானம் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

மேலும், காஸா வன்முறையில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு காரணமான இஸ்ரேல் அரசுக்கு ஐநா சபை கண்டனம் தெரிவித்துள்ளது.

No comments