தென்னிலங்கை ஆக்கிரமிப்பு:வீதியில் இறங்கிய மீனவ சமூகம்!


வடமராட்சி கிழக்கில் அத்துமீறி சட்ட விரோத தொழிலில் ஈடுபட்டு வருகின்ற தென்னிலங்கை மீனவர்களை வெளியேற்றக் கோரி மாபெரும் பேரணியொன்று யாழில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வடமாகாண கடற்தொழிலாளர் சமாசங்களின் சம்மேளன ஏற்பாட்டில் இன்று காலை இப்பேரணி நடைபெற்றிருந்தது.

யாழ் பிரதான வீதியிலுள்ள சமாச முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட இப்பேரணி பிரதான வீதி ஊடாக யாழ் மாவட்டச்செயலகத்தை சென்று நிறைவடைந்தது.
பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கே மேலும் பாதிப்பை ஏற்படுத்துகின்ற தெற்கு மீனவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டுமெனக் கோரி மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜரொன்றும் போராட்டகாரர்களால் கையளிக்கப்பட்டிருந்தது.

முன்னதாக கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தின் யாழ்.அலுவலகத்தை முடக்கும் வகையிலான பகுதி நேரப்போராட்டமொன்றை தமிரசின் சுமந்திரன் தரப்பு அரங்கேற்றியிருந்தது.
இதனூடாக மீனவ அமைப்புக்கள் ஒன்றிணைவதை தடுப்பதுடன் புதிய போராட்டகளங்களை திறக்காதிருப்பதை உறுதிப்படுத்த இத்தரப்புக்கள் முற்பட்டிருந்தன.

எனினும் அதனை தாண்டி தன்னெழுச்சி கொண்டு ஆர்ப்பாட்ட போராட்டமொன்றை இன்று மினவ அமைப்புக்கள் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments