பிரித்தானியா லெஸ்ரர் பகுதியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டி

வெகுசிறப்பாகவும் நேர்த்தியாகவும் இடம்பெற்றுள்ளது. 09/06/2018 சனிக்கிழமை Rushy field, Harrison Road, Leicester, LE4 7 AB.ல்  மங்கள விளக்கேற்றலுடன் விளையாட்டுக்கள் ஆரம்பமாகியது. விழாவுக்கு விசேடமாக வருகைதந்த Leicestershire County உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் பயிற்சிவிற்பாளர் Terry Singh ஐத் தொடர்ந்து Leister City Councillor Baljit Singh, பொது அமைப்புக்களின் நிர்வாகிகள் சமூக ஆர்வலர்கள் கல்விக்கூட ஆசிரியர்களின் மங்கள விளக்கேற்றலுடன் போட்டி கள் ஆரம்பமானது.

பிரித்தானிய தேசியக் கொடியை கிழக்கு லெஸ்ரர் தொழிற்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் Keith Vaz அவர்கள் ஏற்றிவைக்க தமிழீழத் தேசியக் கொடியுடன் பூபதி விளையாட்டுக்கழக ஒரங்கிணைபாளர் சங்கரன் ஏற்றிவைத்த கழகக்கொடியும் சேர்ந்து பட்டொழி வீசிப்பறக்க போட்டி கள் விறுவிறுப்பாக இடம்பெற்றன.

அகவணக்கத்துடன் ஆரம்பமான இந்த போட்டி நிகழ்வில் வழமையான உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம், தடக்களப்போட்டிகள், தண்ட உதை, ஆண்கள் பெண்களுக்கான கயிறுழுத்தல் போட்டி களுடன் மண்மணம் வீசிய முட்டியுடைத்தல், தலையணைச் சண்டை, சங்கீதக்கதிரை போன்ற விளையாட்டுக்களும் இடம்பெற்றதால் பார்வையாளர்கள் குதூகலமடைந்தனர். முட்டியுடைத்தல் தலையணைச் சண்டை போட்டி களில் நம் இளந்தலைமுறையினர் பலர் மிகவும் உற்சாகமாக பங்கெடுத்து பரிசுகள் வென்றது குறிப்பிடத்தக்கது.

No comments