கோட்டையினை காப்பாற்ற நெதர்லாந்து முனைப்பு!


யாழ்ப்பாண ஒல்லாந்த கோட்டையினை மீண்டும் இராணுவ முகாம் ஆக்குவதற்கு இலங்கை அரசு முனைப்பு காட்டிவருகின்றது.இந்நிலையில்  அதனை பாதுகாப்பதற்கும், வடமாகாண அபிவிருத்திக்கும் நெதர்லாந்து நாட்டு அரசாங்கம் உதவி செய்யுமென இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் எச்.இ. டோர்னிவார்ட் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயிடம் உறுதியளித்துள்ளார்.

யாழ். மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட நெதர்லாந்து தூதுவர் எச்.இ. டோர்வார்ட் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயை வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை நண்பகல் சந்தித்து கலந்துரையாடினார்.

சுமார் ஒரு மணி நேரத்திற்;கு மேலாக இடம்பெற்ற இந்த சந்திப்பில் வடமாகாண அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் நெதர்லாந்து தூதுவர் ஆராய்ந்துள்ளார்.

நெதர்லாந்து அரசாங்கம் எமது நாட்டின் அபிவிருத்திக்கும், கோட்டையின் பாதுகாப்பிற்கும் உதவி செய்வதாக தூதுவர் உறுதியளித்துள்ளதுடன், இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்புக்கள் மற்றும் கல்வியில் நிலவும் குறைபாடுகள் தொடர்பில் ஆராய்ந்ததாகவும் ஊடகங்களிடையே ஆளுநர் கருத்து தெரிவித்திருந்தார்.

1990ம் ஆண்டு வரை இலங்கை படையினரது முகாமாக இருந்து வந்த யாழ்.கோட்டைம  முற்றுகை தாக்குதலை நடத்தி படையினரை விரட்டியடித்திருந்தனர்.

எனினும் 1996ம் ஆண்டு மீள யாழ்.குடாநாட்டை படையினர் கைப்பற்றியதையடுத்து கோட்டை மீண்டும் இராணுவத்தின் வசம் சென்pருந்தது.

யுத்த நடவடிக்கையின் போது கடுமையான சேதங்களை சந்தித்திருந்த கோட்டை நெதர்லாந்து அரசினது நிதி உதவியின் கீழ் புனரமைக்கப்பட்டிருந்தது.


தற்போது யாழ்.நகரில் படையினர் நிலைகொண்டுள்ள தனியார் ஆதனங்களை விடுவிக்க ஏதுவாக அம்முகாம்களை கோட்டையினுள் அமைக்க ஆளுநராலேயே ஆலோசனை அரசிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்

No comments