விடுவித்ததை பறித்துக்கொள்ளும் இராணுவம்!
கிளிநொச்சியில் இராணுவத்தினர் கையளித்த பாடசாலை காணி ஒன்றை மீண்டும் இராணுவத்தினர் கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்றைய தினம் இடம்பெற்ற வேளையில் இது தொடர்பில் சமூக அமைப்புக்களால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளன.
கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்குச் சொந்தமான 4 ஏக்கர் காணியை இராணுவத்தினர் 2017ஆம் ஆண்டு விடுவித்திருந்தனர், எனினும் அந்த காணிகளுக்குள் மாணவர்கள் செல்லாதவாறு இராணுவத்தினர் வாயில் கதவுகளை அடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தக்காணியை இராணுவத்தினர் மீளவும் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதினால் பாடசாலை சமுகம் பாதிக்கப்பட்டுள்ளது என்று சமுக அமைப்புக்கள் இணைத் தலைவர்களுக்கு சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும் அன்மையில் இராணுவ அதிகாரி ஒருவர் முதலமைச்சரை சந்தித்தபோது வடக்கில் இராணுவத்தினரால் காணி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டால் தம்மிடம் தெரிவிக்கவேண்டும் என்றும் அதை தாம் தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
எனவே இந்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு, இது குறித்து விரிவான தகவல்களை தரும்படி முதலமைமைச்சர் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.
Post a Comment