சீனாவில் ராணுவ வேலையிலிருந்து வெளியேறுபவர்களுக்கு தண்டனை என்ன தெரியுமா?

சீனாவில் ராணுவத்திலிருந்து பணிபுரிய மறுக்கும் மற்றும் இடையிலேயே வெளியேறும் இளைஞர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
கிழக்கு சீனாவின் புஜியான் மாகாணத்தைச் சேர்ந்த நான்கு வாலிபர்கள் தாங்களாகவே முன் வந்து ராணுவத்தில் சேர்ந்தனர். சேர்ந்த சில மாதங்களில் ராணுவத்திலிருந்து வெளியேறுவதாக அறிவித்தனர். தாங்கள் ராணுவத்தில் பணிபுரிய தகுதியற்றவர்கள் எனவும் தெரிவித்தனர்.
இந்நிலையில், நான்கு வாலிபர்களும் ராணுவ சட்டத்தை மீறியதாகவும், சமுதாயத்தில் தவறான எண்ணத்தை ஏற்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. நான்கு பேருக்கும் 50 ஆயிரம் யுவான் அபராதம் மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் வேலை செய்ய தடை உள்ளிட்ட தண்டனை வழங்கப்பட்டது. இதேபோன்று மற்றவர்களும் தண்டனை வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
இதையடுத்து, ராணுவ வேலையிலிருந்து வெளியேற விரும்புவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படும் என அறிவித்ததன் மூலம் சீனா மற்ற நாடுகளுக்கு உதாரணமாக திகழும்.

No comments