வலிகிழக்கில் வருடத்திற்கு ஒருவராம்:தமிழரசு முடிவு!
வலி. கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளர் வேட்பாளர் யார் என்பது தொடர்பில் கூட்டமைப்பில் நிலவி வந்த நீண்ட நாள் சர்ச்சைக்கு நேற்று இறுதித் தீர்வு எட்டப்பட்டது. வலி. கிழக்குப் பிரதேச சபையில் முதல் இரண்டு ஆண்டுகளும் ரெலோவுக்கும் எஞ்சிய இரண்டு ஆண்டுகளும் தமிழ் அரசுக் கட்சிக்கும் எனத் தீர்மானிக்கப் பட்டிருந்தது.
இதன் பிரகாரம் வலி. கிழக்கில் அதிக ஆசனங்களைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இருப்பினும் தவிசாளருக்குரிய வேட்பாளர் யார் என்பது தொடர்பில் இழுபறி நிலவியது.
இந்த விடயத்துக்குத் தீர்வு காணும் நோக்கில் மாட்டீன் வீதியில் உள்ள கட்சித் தலைமையகத்தில் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராசா தலைமையில் நேற்றுச் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போதே மேற்படி முடிவு எட்டப்பட்டது.
அதன்படி ரெலோ சார்பில் போட்டியிட்ட கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் தி.நிரோஸ் முதல் ஓர் ஆண்டுக்கும் இரண்டாவது ஆண்டில் இராசேந்திரமும் தவிசாளராகப் பதவி வகிப்பர் எனவும் எஞ்சிய இரண்டு ஆண்டுகளும் தமிழ் அரசுக் கட்சி சார்பிலான உறுப்பினர் தவிசாளராக நியமிக்கப்படுவார் என்று தீர்மானிக்கப் பட்டது.
உப தவிசாளராக தமிழ் அரசுக் கட்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசு நியமிக்கப்படவுள்ளார் என்று மேலும் தெரிவிக்கப்பட்டது.
Post a Comment