இந்திய மீனவர்கள் ஐவர் இலங்கை கடற்படையினரால் கைது!


சட்டவிரோதமான முறையில் இலங்கை கடல் எல்லைக்குள் மின்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் 05 பேர் கங்கேசன்துறை கடற்பகுதியில் வைத்து இன்று கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மீனவர்களின் படகு கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இவர்கள் தமிழ்நாடு பிராந்தியத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச கடல் எல்லை தொடர்பாக தௌிவின்றி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்ததாக கைது செய்யப்பட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இவர்கள் விசாரணைக்காக காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள அதேவேளை விசாரணைகளின் பின்னர் மன்னார் மாவட்ட நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளனர்.

No comments