வலையொளி (யூரியூப்) தலைமையத்தில் துப்பாக்கிச் சூடு! தன்னைத் தானே சுட்டுப் பெண் தற்கொலை!

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ மாகாணத்தில் உள்ள யூ டியூப் தலைமை அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை துப்பாக்கி சூடு நடந்துள்ளது.

அந்த அலுவலகத்தின் ஊழியர்கள் தங்களது இரு கைகளையும் உயர தூக்கியபடி வெளியே வரும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.

 யூ டியூப் அலுவலகத்தில் துப்பாக்கி சூடு நடந்துள்ளதால் அப்பகுதியை சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அலுவலகத்தில் நுழைந்த பெண் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தி, தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாகவும், இந்த தாக்குததில், 3 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
No comments